பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உணர்த்த விரும்பிய வள்ளுவர்க்குவந்து உதவியது தண்ணீர்? ஆகவே, அவரிடமிருந்து வெளிவந்து விட்டது. 'புறந்துய்மை நீரான் அமையும்; அகந்தூய்மை வாய்மை யாற் காணப்படும்' என்ற குறட்பா (2.98) அழிவு அறியாப் பெருஞ்செல்வம் கல்வி. பதவி இல்லாமல் போய்விடும்; பொருள் அழிந்துவிடும்; ஆனால் ஒருவன் கற்ற கல்வி என்றும், எந்நிலையிலும் அழிவுறாது. கற்ற ஒருவன், எந்த ஊருக்குச் செல்லினும், எந்த நாட்டிற்குச் செல்லினும், அந்த ஊரும், அந்த நாடும். அவனை, அந்த ஊரான், அந்த நாட்டவன்போலவே மதிக்கும். அத்தகு கல்வியை ஒருவன் நிரம்பப்பெற வேண்டின், அவன் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்; சாகும் வரையும் கற்க வேண்டும்' என்கிறார் வள்ளுவர். 'என் ஒருவன் சாந்துணையும் கல்லாதவாறு' என்ற அவர் குறளினைக் (397) காண்க. ஒருவன் எவ்வளவு கற்கின்றானோ, அந்த அளவே அவன் அறிவு பெருகும். சிறிதே கற்கின் சிறிது அறிவும், பெரிதே கற்கின் பேரறிவும் பெறலாம். கற்றுக்கொண்டே இருப்பின் அறிவும் பெருகிக் கொண்டே இருக்கும். இந்த உண்மையை விளக்க, வள்ளுவர்க்கு வழிகாட்டியானது மணற்கேணியின் ஊற்றுநீர் மணற்பாங்கான நிலத்தில் உள்ள கிணற்றில், நீர், சிறிதே தோண்டின், சிறிய அளவிலான நீ ைர .ே யு தரும்; ஆழமாகத் தோண்டின், அதற்கேற்ப பெரிய அளவிலான நிரைத் தரும். மணற்கேணி, தோண்டத் தோண்ட, நீரைச்சுரந்து கொண்டே இருப்பதுபோல், அறிவும், க ற் க க் கற்கப் பெருகிக்கொண்டே இருக்கு ம் எனக் கூறியுள்ளார். 30