பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிணற்றைத் தோண்டிக்கொண்டே இரு; நீர் பெருகிக் கொண்டே இருக்கும்; இது ஒர் அறிவுரை; எல்லார்க்கும் தெரிந்த அறிவுரை, கற்றுக்கொண்டே இரு; அறிவு பெருகிக் கொண்டே இருக்கும்; இது ஒர் அறிவுரை: ஆனால், எல்லோர்க்கும் தெரியாமல் ஒருசிலருக்கே தெரிந்த அறிவுரை: தெரிந்த அறிவுரையினைத் .ெ த ரி யா த அறிவுரைக்கு உவமையாக்கிக் காட்டியுள்ளார் வள்ளுவர். 'தொட்ட அனைத்து ஊறும் மணல் கேணி, மாந்தர்க்குக் கற்ற அனைத்து ஊறும் அறிவு” (குறள்:396) வாணிகம் செய்ய முதல் தேவை. முதல் இல்லாமல் வாணிகம் செய்ய இயலாது. முதலும் தொழிலுக் கேற்றவாறு அமைதல்வேண்டும். போதியமுதல் இன்றித் தொடங்கப்படும் தொழிலில் ஆக்கம் வராது, ஆக்கம் வராதது மட்டும் அன்று; உள்ள முதலும் அற்றுப் போகும், இது தொழில் .ெ தா ட ங் குவா ர், வாணிகம் செய்வார் அனைவரும் அறிந்திருக்க வேண்டிய, அறிந்திருக்கும் அறவுரை; அறிவுரை. எல்லோரும் அறிந்திருக்கும், இவ்வறவுரையினை எளிதில் உ ண ர் ந்து கொள்ளமாட்டா. ஆனால் இன்றியமையாது அறிந்து கொள்ளவேண்டிய ஓர் அறவுரைக்கு உவமையாக்கியுள்ளார் வள்ளுவர். ஒருவனுக்கு வாழ்க்கையில் துன்பம் நேரும்போது தூண்போல் நின்றுதாங்கி, அத்துயர் துடைக்கவல்ல பெரியார்களின் துணை அ வ னுக் கு இன்றியமையாது. அத்தகைய பெரியோர்களை, ஒருவன் துணையாகப் பெறத் தவறி விட்டானாயின், அவனுக்கு வாழ்வு இல்லை; வாழ்வு இல்லை என்பது மட்டும் அன்று. அவன் இல்லாமல் அழிந்தே போவன். இந்த உண்மையை உணர்த்தவே, அந்த உண்மை உவமை. - "முதல் இலார்க்கு ஊதியம் இல்லை; மதலையாம் சார்பிலார்க்கு இல்லை நிலை' (குறள் 449)