பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வறியராய் இரு க் கு ம் நிலையிலும், பிறர்பொருளை விரும்பாத சிறந்த அறிவுடையார் யாவர் என அறிந்து; அறிந்தபின் அவர்பால் தான் சென்றடையும் வழியாது என ஆராய்ந்து, ஆராய்ந்து அறிந்த வழி. அந்நல்லாரைச் சென்று அடையும் திருமகளை, 'அறன் அறிந்து வெஃகா அறிவுடையார்ச்சேரும் திறன் அறிந்து ஆங்கே திரு” (179) அறிந்திருந்தனர் பழந்தமிழ்ப் பெரியவர்கள். மூதேவி, திருமகளின் தமக்கையாகக் கருதப்பட்டாள், பொறாமை கொள்ளும் இயல்புடையானை விட்டுத் தான் நீங்கும் போது ஏற்படும் அவ்வெற்றிடத்திற்குச் சென்று இடங்கொள்ளுமாறு தி ரு ம க ள ல் வழி காட்டப்படுவாள் (மேலே காட்டிய குறள் (167) ) கரியநிறமேனி வாய்த்தவ ளும், முகடிஎன அழைக்கப்படுபவளுமாகிய அம் மூதேவி! சோம்பேறிகளின் மடிகளில் தவழ்ந்து விளையாடுவாள். (மடியுளாள் மா மு கடி என்ப 1617) ) என நம்பினர் பழந்தமிழர். இந்திரன் பரந்தகன்ற பேருலகாம் தேவலோகத்தை ஆட்சிபுரிபவனும், கெளதமன் மனைவி அகலிகைபால் ஆசைகொண்டு, அக் கெளத்மனால் சபிக்கப் பெற்று, உடலெல்லாம் ஆயிரம் கண்களைப் பெற்றுக் கொண்டவனுமான இந்திரனை அறிந்திருந்தனர் பழந்தமிழர். 'ஐந்து அவித்தான் ஆற்றல் அகல் விசும்புளார் - கோமான் இந்திரனே சாலும் கரி' (25)