பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வான்உலகம் வரம்’ என்றும் (24), 'வான், என்றும்(50, 86, 346), "வானம், என்றும் (353), புத்தேளிர் வாழும் உலகு" என்றும் (58), புத்தேள் உலகு,என்றும் (213, 234, 290, 966, 1323), மேல் உலகம், என்றும் (222), வழங்கப்பெரும், வானவர் வாழும் உலகைஅறிந்திருந்தனர் அக்காலத்தமிழர். யானையை மதம்பிடித்து அலையவிடாது அங்குசத்தால் அடக்கி வைப்பதுபோல, மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகளையும், அவை செல்லத் துடிக்கும் இடங்களுக்கெல்லாம் செல்லவிடாது, மன உறுதியால் அடக்கி வைக்க வல்லான் ஒருவன், வானுலகில்சென்று முளைக்கவல்ல சிறந்த வித்துஆவன். அதாவது வானுலக வாழ்வைப் பெருவன். 'உரன் என்னும் தோட்டியான் ஓர் ஐந்தும் காப்பான் வரன் என்னும் வைப்பிற்கோர் வித து (24) இந்நிலவுலகில், வாழ வேண்டிய முறையில் சிறிதும் வழுவாது வாழ்ந்து காட்டுவான், இந்நிலவுலகத்தவனே எனினும், வானுலக வாழ்வினதாம் தெய்வமாகவே மதித்து வழிபடப்படுவன், - 'வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன், வான்உறையும் தெய்வத்துள் வைக்கப்படும். (50) நாள்தோறும் தன் விடுநோக்கி வரும் விருந்தினரைச் செவ்வனே ஒம்பி அனுப்பிவிட்டு, அடுத்து விருந்தினர் வருவார்களா என வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கும் ஒருவன், வானுலகத்தவரால் ந ல் ல விருந்தாளியாக வரவேற்கப்படுவன். 'செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்விருந்து வானத் தவர்க்கு (86) 35