பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன்னுடையதல்லாத உ ட ம் ைப த் த ர ன் என்றும், தன்னுடையதல்லாத, பொன், பொருள். வீடு, நிலம், போ ன் ற வ ற் ைற த் தன்னுடையதென்றும் எண்ணும் அறியாமை உணர்வை அறுத்து எறிபவன், தேவர்களாலும் அடையமுடியாத நணிமிக உயர்ந்த மோட்ச உலகை அடைவான். 'யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கும் உயர்ந்த உலகம் புகும்’ (346) இதுவா? அதுவா?; உண்டா? இல்லையா? என்ற ஐயப் பாடாம் மயக்க உண ர் வி லி ரு ந் து விடுபட்டு, இதுதான் அல்லது அதுதான்; உண்டு அல்லது இல்லை என்ற தெளிந்த அறிவு பெற்றவர்க்கு, அவர் வாழும் இந்நில உலக வாழ்க்கையைக் காட்டிலும், மோட்ச உலக வாழ்க்கை அண்மையினதாகிவிடும். 'ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் வானம் நனியது உடைத்து' (353) மனைவியர், தம்முடைய கணவராகப் பெற்றவரை கணவன் என்ற பெயரளவில் அல்லாமல், அப்பெயருக்கு ஏற்ற இ ய ல் ெய ல ள ம் வாய்க்கப் பெற்றவராகப்பெற்று விடுவராயின், அத்தகைய மனைவியர், புத்தேளிர் வாழும் உலகத்தவர் பெறும், பெரும் சிறப்பு வாய்ந்த வாழ்க்கையைப் பெற்றவராவர். "பெற்றான் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாழும் உலகு’’ (58) 36