பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேண்டுவார்க்கு வேண்டும் உதவிகளைச் செய்வதாகிய ஒப்புரவு எனும் செயலே, ஒருவன் செய்யும் செயல்கள் அனைத் தினும் தலையாயது: அத்தகையதொரு வேறு நல்ல செயலை, இந்நில உலகிலும் பெறுதல் இயலாது; தேவர் உலகத்திலும் பெறுதல் இயலாது. 'புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறல்அரிதே ஒப்புரவின் அல்ல பிற' (213) இந்நிலவுலகில் ஒருவன் என்றும் அழியாப் பெரும்புகழ் தரவல்ல ந ற் பணி க ைள ஆற்றிவிடுவானாயின், தேவர் உலகில் உள்ள பெரியார்கள், ஆங்கு வாழ்வார்களைப் புகழ மறுத்துவிடுவர்; இவர்களையே புகழ்ந்து பாராட்டுவர். 'நிலவரை நீள் புகழ் ஆற்றின் புலவரைப் போற்றாது புத்தேள் உலகு’’ (234) களவாடலைத் தொழிலாக மேற்கொண்டவர்களை, அவர்கள் வாழும் உயிர்வாழ்தற்கு இடமாகிய இந்நில உலகம் வாழவிடாது தள்ளி வைத்துவிடும். மாறாகக் களவாடலைக் கனவிலும் நினையாதவர்களை வானுலகம்,தள்ளி வைக்காதது மட்டுமன்று, ஏற்று வாழ்வளிக்கும். - கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத் தள்ளாறு புத்தேள் உலகு” (290) ஒருவன், தன்னை எப்போதும் இகழ்ந்தே பேசுவார். பின்னாலேயே சுற்றிச் சுற்றி வந்து நிற்கும் இழிநிலை. அவனுக்கு இந்நிலை உலக வாழ்க்கையாம் இம்மையிலும், பழியையல்லது புகழைத்தராது; மறுமை வாழ்க்கை எனக் கருதப்படும் தேவருலக வாழ்க்கைக்கும் அவனை அனுப்பி வைக்காது. அங்ங்னமாகவும், இ க ழ் வா ர் பின் சென்று நிற்பது ஏனோ? - 37