பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை இருபதாம் நூற்றாண்டு தமிழகத்தின் வரலாற்றில், தனக்கென ஒரு சிறப்பிடத்தைப் பெறத்தக்கவகையில், நல்ல தமிழ் அறிஞராக, வரலாற்றுத் திறனாய்வாளராக, செந்தமிழ்ப் பேச்சாளராக, இலக்கியப் படைப்பாளராக, பாதைமாறாத பகுத்தறிவுவாதியாக, அ ப் ப ழு க் க ற் ற அரசியல் தலைவராக, சட்டமன்றப் பேரவைத் தலைவராக என பல்திறன்படைத்த நற்றமிழ்ப் புலவராய் விளங்கியவர் புலவர். கா. கோவிந்தனார் அவர்கள். 'தமிழுக்கும், தமிழ்ப்புலவர்கட்கும், தமிழ் நாட்டுக்கும், தொண்டாற்றத் தன்னையே அர்ப்பணித்தவர்' என்று பேரறிஞர் அண்ணா அவர்களால் பாராட்டப் பெற்ற பேறு பெற்றவர். பைந்தமிழ் வ ல் ல புலவராய் உயர்ந்து, சங்கத் தமிழ் ஏடுகளிலெல்லாம் திளைத்து, வரலாற்றுக்கண் கொண்டு ஆய்ந்து, தொல் காலத்தமிழர் வாழ் ைவ இக்காலத்தவரும் தெளிந்திடுமாறு தேன்தமிழ்ச்சுவடிகளாக வரைந்து வ ழ ங் கி ய பெருமை உடையவர் புலவர் கோவிந்தனார் அவர்கள். புலவர்களுள் புலவராய் விளங்கி, திருவண்ணாமலை குன்றக்குடி ஆதினத்தாரின் "புலவரேறு' பட்டம், தமிழக அரசின் 'திரு. வி. க. விருது, ம து ைர காமராசர் பல்கலைக் கழகத்தின் "தமிழ்ப்போவைச் കെഥ്' பட்டம், போன்ற சிறப்புகளைப் பெற்ற புலவர் அவர்களது தமிழ்ப்பணி பொன் விழா கண்டது சிறப்பினையுடையது.