பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போய்விடாவாறு, தன் வாயைத் திறவாது மூடிவைத்துக் கொள்ளும். 'உண்ணாமை உள்ளது உயிர்நிலை; ஊன்உண்ண அண்ணாத்தல் செய்யாது அளறு' - (255) மெய், வாய், மூக்கு, கண், செவி, எனும் ஐம்பொறி களையும், மனத்தையும் அவை செல்ல விரும்பும் இடம் எல்லாம் செல்லவிடாது அடக்கவல்லவன், அமரர் உலகம் அடைவன். அவற்றை அடக்க இயலாமை, அவனை இருள் நிறைந்த உலகமாப் நரகத்தில் கொண்டுவிட்டுவிடும். 'அடக்கம் அமரருள் உய்க்கும்; அடங்காமை ஆர்.இருள் உய்த்து விடும்’ . (121) அருள் நிறை .ெ ஞ் சு உடையவர்கள். காரிருள் சூழ்ந்தது; கடுந்துன்பம் தரவல்லதாகிய நகர வாழ்க்கையில் புகுந்து உழலும் நிலை என்றும் வாய்க்காது. 'அருள் சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை; இருள்சேர்ந்த இன்னா உலகம் புகல்” - * - - (243) பிறர் உடைமை கண்டு பொறாமையாகிய அழுக்காறு என அழைக்கப்படும் ஒப்பு இல்லாத பாவி, அப் பொறாமை உடையவன்பால், இயல்பாகவே இருந்த உடைமைகளை யெல்லாம் இல்லாமல் செய்து விடுவதோடு, அவனைக் கொடுந்தீ கொழுந்து விட்டெரியும் நரகத்திலும் தள்ளிவிடும். 'அழுக்காறு என ஒருபாவி திருச்செற்றுத் தீயுழி உய்த்து விடும்’ (168) நரகத்தைப்பற்றி இவ்வாறெல்லாம் உணர்ந்திருந்தனர் பழந்தமிழ் மக்கள். -