பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யமன் வடவர் யமனைக் கூற்றுவன் என்ற பெயரால் அறிந் திருந்தனர் பழந்தமிழர். தனக்குவந்த துயரைத்தாங்கிக் கொண்டு, பிற உயிர்களுக்குத் தீங்கு செய்யாமையாகிய தவநெறியில் வல்லவராகி விட்டவர்களுக்குக், கைப்பற்றக் கருதிய உயிரைத் தப்பாது கைப்பற்றவல்ல யமனையும் வெற்றி கொள்ள இயலும்.

  • கூற்றம் குதித்தலும் கைகூடும், நோற்றலின்

ஆற்றல் தலைப்பட்ட வர்க்கு” (269) உயிர்களை உணவாக உண்ணும் இயல்புடையவன்தான் கூற்றுவன். அக்கூற்றுவனும், பிற உயிர்களைக் கொள் வதில்லை எ ன் ப ைத க் கொள்கையாகக்கொண்டு வாழ்கின்றவன் வாழ்நாளைக் குலைக்கமாட்டான். 'கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள்மேல் செல்லாது உயிர்உண்ணும் கூற்று' (326) கைப்பற்றக் கருதிய உயிர்களைக் கடுகளவும் தப்பாது கைப்பற்ற வல்லவன் கூற்றுவன்; அக்கூற்றுவனே கடுஞ் சினம்கொண்டு எதிர்த்துவரினும், அஞ்சி மூலைக்கு ஒன்றாக ஒடிவிடாது, ஆங்காங்குச் சிதறிக்கிடந்த நிலையிலிருந்து ஒன்று திரண்டுவந்து அக்கூற்றுவனை எதிர்த்துப் போரிட வல்லதே படையாகும். கூற்றுடன்று மேல்வரினும், கூடி எதிர்நிற்கும் ஆற்றல் அதுவே படை’’ (763) பேராண்மை வாய்ந்தான் ஒருவனுக்கு, வல்லமையே இல்லாதான் ஒருவன் கேடுசெய்தல், காலம் வரும்வரை காத்திருக்கும் கூற்றுவனை, அக்காலம் வருவதற்கு முன்னரே தானே கைதட்டி அழைத்தது போன்றதாகும். 40