பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு ஆற்றாதார் இன்னா செயல்’ (894) கூற்றுவன்பற்றி, பழந்தமிழர் கொண்டிருந்த கொள்கை இது. வள்ளுவரின் கடவுட் கொள்கை ஆரியச் சமயக் கொள்கைகள், இவ்வாறு எல்லாம் தமிழகத்தில் ஆ ழ ம க வேரூன்றிக்கிடந்த காலத்தே தோன்றிய திருவள்ளுவர், பழந்தமிழர் உள்ளத்தில் ஊறிக் கிடந்த அவ்வுணர்வுகளையே, அ த் த மி ழ ர் காளி ன் வாழ்க்கையைச் செம்மைப்படுத்தும் கருவிகளாகப் பக்குவமாகக் கையாண்டுள்ள அவர் கைவண்ணத்தை இனிக்காண்போம். 'தென்புலத்தார், தெய்வம்,விருந்து, ஒக்கல்,தான் என்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை’’ (43) என்ற குறளில், தெய்வத்திற்குத் தனியானதொரு இடங்கொடுத்து விடவில்லை; தென்புலத்தார், விருந்து, ஒக்கல், தான் என்ற நல்லவரோடு சேர்த்து, இரண்டாம் இடத்தையே கொடுத் துள்ளார்' வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும்’ (50) என்ற குறள் மூலம், வான்உறையும் .ெ த ய் வம் எனத்தனியே இல்லையே; வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்துவிட்டால், நீயும் வானுறையும் தெய்வமாகிவிடலாம் என்று கூறியதன் மூலம், ஒரு வாழ்க்கைநெறிச் சட்டத்தை வகுக்கவே தெய்வத்தைத் துணைக்கு அழைத்துள்ளார். "தெய்வம் தொழாஅள்: கொழுநன் தொழுதுஎழுவாள் பெய்எனப் பெய்யும் மழை' (55) என்ற 44