பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறளில் மழையைப்பார்த்து 'ம ைழ யே பெய்' என்று தெய்வத்தைத் தொழுபவர்கள் சொன்னால்தான் மழை பெய்யும் என்பது இல்லை; தன் கணவனுக்கு ஆ ற் ற வேண்டிய கடமைகளைக் குறைவற ஆற்றுவதாம், கணவனைத் தொழுதெழும் ஒருநல்ல மனைவி, மழையைப் பார்த்து 'பெய்" என்று சொன்னாலும், அம்மழை தட்டாது பெய்யும், எனக் கூறியதன்மூலம், மனைவியின் கடமைக்கே பெருமை சேர்த்துள்ளார். 'தெய்வத்தான் ஆகாது எனினும், முயற்றிதன் மெய்வருத்தக் கூலி தரும்' (619) என்ற குறளில் செய்துமுடிக்க முயன்ற ஒரு செயல், தெய்வத்தின் துணையை நம்பியிருந்தமையால், ஒருவேளை முடியாமல் போனாலும் போகக்கூடும்; ஆனால் மெய்வருந்த முயன்றால், முற்றிலும் முடியாமல் போனாலும், உழைத்த அளவிற்காவது பயன்கிடைக்கும் எனக் கூறியதன் மூலம், க ட வு ள் நம்பிக்கையைப் பின்னுக்குத் தள்ளிக் கடமை உணர்வுக்கு முன்னிடம் தந்துள்ளார். 'ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத் தெய்வத்தோடு ஒப்பக் கொளல் (702) என்ற குறளில், மனிதனைக் காட்டிலும் உயர்ந்த ஓர் இடத்தைத் தெய்வத் திற்குக் கொடுத்து விடாமல், ஒருவர் உள்ளத்தில் உள்ளதை உள்ளவாறே உணரவல்ல வன்மை ஒருவனுக்கு இருக்குமேல், அவன் .ெ த ய்வமாகவே மதிக்கப்படுவான் எனக்கூறியதன் மூலம், தெய்வத்தையும், மனிதனையும் ஒருபடித்தாகவே மதித்துள்ளார். வள்ளுவரும் திருமாலும் 'குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான் முந்துறும்’ (1023)என்ற குறட்பாவில் 42