பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தான்பிறந்த குடியை எல்லா வகையாலும் உயர்த்தவேண்டும் என விரும்பியவன் ஒருவன், அதற்காக மடியுடுத்துக் காட்சி அளித்துக்கொண்டு நிற்கும் திருமாலைச் சுற்றிச்சுற்றி வராமல், கடின உ ைழ ப் பி ல் இறங்கி விடுவனாயின், மடி யுடுத்தி நிற்கும் அம்மால், தன் மடியை வரிந்து கட்டிக் .ெ க | ண் டு, ஒடி ஓடிவந்து, அவ்வுழைப்பானுக்கு உறுதுணையாகத் தானும் உழைப்பன் எனக் கூறியதன்மூலம் கடவுள் வழிபாட்டினும் கடமைக்கே முதலிடம் தந்துள்ளார். "மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான் தாஅயது எல்லாம் ஒருங்கு (610) என்றகுறட்பாவில் வானளாவும் பேருருவம் கொண்டு, திருமால், தன் இரண்டு திருவடிகளால், அளந்துகொண்ட மூன்று உலகங்களையும், மடி, அதாவது சோம்பல், என்ற ஒன்றை விட்டுவிட்ட ஒருவன் பெற்றுவிடுவான் எனக் கூறியதன்மூலம், சோ ம் ப ல் இன்மைக்கே முதலிடம் கொடுத்துள்ளார். "தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல் தா ம ைர க் க ண் ண | ன் உலகு (1103) என்ற குறட்பாவில், தாமரைக்கண்ணான் உலகு எனப்படும் வைகுந்தத்தில் பெறும் இன்பமே பேரின்பம் என்பர் பலரும்! அந்த இன்பம், ஒருவன், தான்விரும்பும், தன்னை விரும்பும் ஒரு பெண்ணின் மெத்தென்ற தோள்மீது படுத்து உறங்கும் போது பெறும் இன்பத்தைக்காட்டிலும் பெரிதாகுமோஎன எதிர்மறை வினாவோடு இராது உறுதியாக என விடை யளித்ததன்மூலம், வைகுந்த இன்பத்திற்கு இரண்டாம் இடமே கொடுத்துள்ளார் வள்ளுவர். - வள்ளுவரும் திருமகளும் 'அகன்அமர்ந்து செய்யாள் உறையும் முகன்அமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல்’’ (84) 43