பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்ற குறட்பாவில், 'நல்ல விருந்தினர்களை அகமும் முகமும் மலர வரவேற்று, அவர் விரும்பும் நல்ல உணவை, அவர் விரும்பும் அளவு வழங்கி வாழ்பவன் இல்லத்தில், திருமகள் மகிழ்ச்சியோடு வீற்றிருப்பாள்’’ எனக்கூறியதன் மூலம், திருமகளைத், திருமாலின் உந்திக் கமலத்திலிருந்து இறக்கிக் கொண்டுவந்து, இந்நிலவுலகத்தான் ஒருவன் இல்லத்தில் குடிவைத்துவிட்டதோடு; திருமகளைத் தேடி நீ ஓடாதே; விருந்தினர்களை ஒம்பு; திருமகள் உள்னைத் தேடி வந்தடைவாள் என,அவளை விருந்தாற்றல் பண்பிற்குப் பிற்பட்டவளாகவும் ஆக்கிவிட்டார் வள்ளுவர், "மடியிலான்தாள் உளாள் தாமரையினாள்” என்ற குறட்பாவில் (617), மடி, அதாவது சோம்பல் என்பதையே அறியாது எப்போதும் உழைத்துக் கொண்டேயிருக்கும் ஒருவன் கால்கள், தான் வீற்றிருக்கும் தாமரை மலரினும் சி ற ந் தா. க க் கொண்டு, அத்தாமரை மலரை விடுத்து, உழைப்பவன் கால்களில்போய் அமர்ந்து கொள்வாள் திருமகள் எனக்கூறியதன் மூலம், திருமகள் வீற்றிருக்கும் தாமரை மலரைக்காட்டிலும், உழைப்பவன் கால்களுக்கு முதலிடம்கொடுத்து, கடவுள் வழிபாட்டினும், கடமை யாற்றலுக்குப் பெருமை சேர்த்துள்ளார். 'அறன்.அறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும் திறன் அறிந்து ஆங்கே திரு" (179) என்ற குறட்பாவில் அறமாவது யாது, அறமல்லாதது யாது, என்ற தெளிந்த அறிவு வாய்க்கப்பெற்று, தாம் வரியராய் இருக்கும் நிலையிலும், பிறர்பொருளை விரு ம் பா த சிறந்த அறிவுடையார் இந்நிலவுலகில் யாவர் என ஆராய்ந்து அறிந்து, அறிந்தபின் அவரைச் சென்றடையும் வழி யாது எள ஆராய்ந்து, ஆராய்ந்து அறிந்தவழி, அந்நல்லாரைச் சென்றடைவாள் திருமகள் எனக் கூறியதன்மூலம்' 44