பயன் நிறைவேறியதாகும் என்றா? இவ்வினாக்களுக் கெல்லாம், எதிர்மறை விடைகளையே வழங்கியுள்ளார் வள்ளுவர். விளக்கங்கள் இதோ! 'யானையை அங்குசத்தால் அடக்கிவைப்பது போல் ஐம்பொறிகளை, உள்ளத்து உறுதியால் அடக்கிவைப்பவன், வானுலக வாழ்வைப் பெறுவன் (குறள்-24); இவ்வுலகில் வாழவேண்டிய முறையில் வாழ்பவன், வானுலகவாழ் தெய்வ மாகவே மதிக்கப்படுவன் (குறள்-50); வந்த விருந்தினர்களை ஒம்பிவிட்டு, வரும் விருந்தினர்களை எதிர்நோக்கிக் காத்திருப்பன், வானவர்க்கு விருந்தாவன் (குறள்-86); தான், தனது என்ற தன் உணர்வை விடடுஎறிந்தவன். வானவர்களும் அடைய இயலா மோட்ச உலகை அடைவன் (குறள்-346); ஐயம் திரிபு அறக்கற்ற தெளிந்த அறிவுடையவனுக்கு, வானுலக வாழ்வு எளிதில் கிடைத்துவிடும். (353); வேண்டு வார்க்கு வேணடும் உதவிகளைச் செய்வதாகிய நற்செயல் இந்நிலவுலகில்தான் உண்டு; தேவர் உலகி ல் அதைக் காணவும் இயலாது (குறள்-213) ; ஒருவன் இந்நிலவுலகில், நல்ல பல அறப்பணிகளை ஆற்றிவிடுவானாயின், தேவர்கள் ஆங்குள்ள தேவர்களைப் புகழ்வதுவிடுத்து, இவனையே புகழ்வர் (குறள் 234 என பல குறட்பாக்களில் வானுலகத்தின் தன்மையையும் நிலவுலகின் மேன்மையையும் பற்றிய தம் கருத்துக்களை எடுத்துரைத்துள்ளார். மேலும், களவாடுவானுக்கு, இந்நிலவுலகம் இடம் அளிக்க மறுக்கும்போது, களவாடலை அறியாதானை, வானுலகம் மறவாது வரவேற்று இடமளிக்கும்” (குறள்:290); ஒருவன், தன்னை இகழ்வார் பின்னாலேயே சுற்றிச் சுற்றி வரின், அது இம்மை , மறுமைகளில் பழியையே தரும்; அதுமட்டும் அன்று, வானுலக வாழ்க்கைக்கும் அவனை அனுப்பி ை வ க் க ச து . (குறள்:966), பிறர்க்கு, பிற 46
பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/57
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f5/%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF.pdf/page57-720px-%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF.pdf.jpg)