பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்களுக்கு, உதவுவதற்காக என்று யாசிப்பதால், வானுலக வாழ்வே அவனுக்கு மறுக்கப்படும் என்றாலும் யாசிப்பதே நல்லது (குறள்:222) ; என்றெல்லாம் கூறியிருப்பதன் மூலம், கடமைநெறி உணர்ந்து, வாழ்வாங்கு வாழ்ந்துகாட்டும், மக்கள் வாழும், இம்மண்ணுலகினும், அவ்விண்ணுலகம் விழுமியதன்று என்பதை அடித்துக் கூறியுள்ளார் வள்ளுவர். திருக்குறளில் கடவுள் வழிபாடு ஆக, இதுவரை கூறிய வி ள க் க ங் க ள ல், கடவுள் வழிபாட்டு நிலையினும், கடமை வழுவா நிலையையே திருவள்ளுவர் வற்புறுத்தியுள்ளார் என்பது தெளிவாகிறது. அங்ங்னமாயின், கடவுள் வாழ்த்து என்ற தலைப்பின் கீழ்ப் பத்துகுறட்பாக்களை அளித்திருப்பானேன்? அவற்றை அளித்த அவரைக், கடவுள் நெறியினும், கடமை நெறிக்கே முதலிடம் அளிப்பவர் எனக் கூறல் பொருந்துமா எனக்கேட்கக்கூடும். கேள்விமுறையானது தான்; ஆயினும், அக்குறட்பாக்கள் பத்தையும் ஒருமுறை உ ற் று .ே ந க் கு ங் க ள். வள்ளுவர் உள்ளத்தை ஆங்கே காணலாம், ஆம், கடவுள் வாழ்த்து என்ற அதிகாரத்தில் பத்து திருக்குறள்களைப் பாடிவைத்துள்ளார் திருவள்ளுவர். ஆனால், மேலேகாட்டியவாறு, தன்குறட்பாக்கள் சிலவற்றில் திருமாலையும், திருமகளையும், இந்திரனையும், யமனையும், குறிப்பிட்டிருப்பதுபோல், கடவுள் வாழ்த்தாகவரும் பத்து குறட்பாக்களில், எந்தக்குறளிலும், அத்தகைய தெய்வத் திருமேனியுடைய கடவுள் எதையும் குறிப்பிடவில்லை. மாறாக, முதற்குறட்பாவில், "ஆதிபகவன் என்ற ஒருவனையும், மூன்றாவதுகுறளில் 'மலர்மிசை ஏகினான்' 47