பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்ற ஒருவனையும், எட்டாவது குறளில் 'அறவாழி அந்தணன்' என்ற ஒருவனையும் குறிப்பிட்டது தவிர்த்து, ஏனைய குறட்பாக்களில், “வாலறிவன்'; வேண்டுதல் வேண்டமை இலான்', 'இறைவன்', 'பொறிவாயில் ஐந்து அவித்தான்', 'தனக்கு உவமை இல்லாதான்', 'எண்குணத்தான்”, எனச், சிலபல பண் புக ைள உடையவர்களையே குறிப்பிட்டுள்ளார். வித்தின்றி முளை இல்லை என்ப; பொருள் ஒன்று உண்டேல், அதைத் தோற்றுவித்த ஒன்று இருக்க வேண்டும் என்ற வாத அடிப்படையில், உலகம் இருக்கவே, அதைத் தோற்றுவித்த ஒருவன் இருத்தல்வேண்டும் என உணர்ந்ததன் விளைவால், ஆதிபகலனைக் கூறினார். உருவம் அற்றவன் அவன். ஆகவே, அது. ஆரிய வழிபாட்டு அடிப்படையில் வந்த கடவுள் அன்று. ‘'எத்துணையும் பேதம் இன்ற; எவ்வுயிரும் தம்உயிர் போல்எண்ணி, உள்ளேஒத்து . х உவக்கின்றார், யாவர் அவர்உளந்தான், சுத்தசித்துருவாய், எம்பெருமான் நடம்புரியும் இடம் என நான் தெரிந்தேன்' என்றார் வடலுர்வள்ளல் பெந்தகையாளர். ஆகவே அத்தகு நல்லார் உள்ளத்துக்கே முதல் இடம் அளித்து 'மலர்மிசை ஏகினான்’ என்றார்; இங்கும் வடிவம் இல்லை. ஆரிய வழிபாட்டு நெறியோடு கலந்தது அன்று. . உலகில் நின்று நிலைபெற வேண்டியது அறம்: அவ்வறம் கடல்போல், ஆழ்ந்து அகன்ற பேரறமாதல் வேண்டும் என்ற அறவுணர்வால் 'அறவாழி அந்தணன்' என்றார்; அந்தணர் என்போர் ஆரியப் பார்ப்பனர் அல்லர். 48