பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தணர் என்போர் அறவோர்!’ காரணம், மற்று எவ் வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான் (30) என்றார் பிறிதோரிடத்தில். ஆக, அறவாழி அந்தணனும், ஆரியக் கடவுள் அல்லன்: அறமும், செந்தண்மையும் நிறைந்த செம்மல். 'அ றி வு டை யார் ஆவது அரிவார்' (427) 'அறிவுடையார் எல்லாம் உடையார்' (429) என்றெல்லாம் அறிவுடையவர்களின் பெருமை பேசுபவர் திருவள்ளுவர். ஆகவே, அவ்வறிவுடையார், வாலறிவுடையார், வழிபடத் த க் க வ ரா வர் என்றார். ஆகவே ஆறிவுடைமையாம் கடமைக்கே முதலிடம்; ஆரியக் கடவுளுக்கு அன்று. "சுழலும் இசை வேண்டி’ (77); நலம் வேண்டின் நாணுடைமை வேண்டு” (960); குலம் வேண்டின் பணி வுடைமை வேண்டு' (960); எனப்படுவன இவை எனவும்: ‘'வேண்ட ற்க வெஃகி શt ஆக்கம்’ (177); வேண்டற்க வென்றிடினும் சூதினை' (931); இசை வேண்டின், உயிர் வேண்டாதே' (777); இசை வேண்டா ஆடவர் நிலக்குப் பொறை' (1003) என உலகத்தவர் நல்லவனாக வாழ வேண்டின், அவன் வேண்டுவ யாவை; வேண்டத்கூடாதன யாவை என இலக்கணம் வகுத்ததோடு. வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டுஇல்லை யாண்டும் அஃது ஒப்புது இல்’’ (363) வேண்டாமை என்னும் செருக்குவிறல் (வெற்றி) ஈனும்ளன வேண்டாமையின் விழுச்சிறப்பையும் எடுத்து விளக்கியுள்ளார் வள்ளுவர். இது உலகில்வாழும் எல்லார்க்கும் பொருந்தும் விதி முறைகள். ஆக, வேண்டுதல், வே ண் டா ைம ஆகிய 49