பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டுமே, ஓரோவழி ஆக்கமும், ஒரோவழி அழிவும் தர வல்லவனாம் என்பது இதனால் தெளிவாயிற்று; ஆகவே, வேண்டுதல், வேண்டாமை ஆகிய இரண்டுமே இல்லாதவர்; நனிமிக உயர்ந்தவராவர்; அத்தகையார் உலகத்தவர் அனைவராலும் வழிபடத்தக்க விழுமியோர் ஆவர். ஆகவே, வள்ளுவர் வகுத்த வேண்டுதல் வேண்டாம்ை இலான்’ (4), இம்மண்ணுலகு வாழ் மனிதனே அல்லது விண்ணுலக வாழ்தேவன் அல்லன். "முறைசெய்து காப்பாற்றும் மன்னவன், மக்கட்கு இறையென்று வைக்கப் படும்' (388) என்றார் வள்ளுவர். 'திருவுடைமன்னரைக்காணின், திருமாலைக் கண்டேனே என்றும்' என்றார் பெரிய ழ் வார் . ஆக, திருக்குறள், அறத்துப்பாலில் எடுத்துக்கூறிய தனிமனிதப் பண்பாடுகளையும், பொருட்பாலில் எடுத்துக் கூறிய, அரசர்க்கே உரிய பண்பாடுகளையும், கொண்டிருப்பவனும், இறைவன் (அதாவது)கடவுளாக மதிக்கப்பெறுவன். ஆகவே, குறட்பா ஐந்திலும் பத்திலும் கூறப்பட்டிருக்கும் இறைவன், முறைவழி நாடாளும் மன்னவனே அல்லது; விண்ணுலகு வாழ் வேந்தன் அல்லன் மண்ணுலகில் வாழ்ந்தவன் கெளதமன்; ஆனால் ஐந்து ஆசைகளையும் அடக்கியவன்: விண்ணுலகோரின் வேந்தன் இந்திரன். ஆனால் ஐந்து ஆசைகளையும் அடக்காதவன். அதனால், அவன், கெளதமனால் சபிக்கப்பட்டு, ஆயிரம்கண் பெற்ற நிகழ்ச்சியை, 'ஐந்து அவித்தான் ஆற்றல் அகல் விசும்புளார் கோமான் இந்திரனே சாலும்கரி' (25) எனக் கூறியுள்ளார். ஆகவே, ஐந்தை அவித்த பெரியோன், இம்மண்ணுலகத்தவனே எனினும், விண்ணுலத்தவன்போல் 50