பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிபடத் தக்கவன்என்பதால், பொறிவாயில்:ஐந்தவித்தான் (6) எனவள்ளுவர் வகுத்த கடவுள் ஆரிய வழிபாட்டுக் கடவுள் அன்று. 'ஈடும் எடுப்பும் இல்லாதவன்- ஈசன்’ என்பது திருவாய் மொழி; அத்தகுபெருமை உடையார் யாவரே ஆயினும், அவர்கள் இறைவனாகவே வழிபடத்தக்கவராகவே மதிக்கப் பெறுவர் ஆதலில், வ ள் ளு வ ர் கூ று ம் 'தனக்குஉவமை இல்லாதான், (7) மண்ணுலகிலும் காணலாம் மக்கள் இனத்தவனே, என்றால், அது தவறாகாது. தன்னைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளுதல், துய்மை உடையவனாதல், இயற்கை உணர்வினனாதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பந்தபாசங்கள் இல்லாமை; பொருள் உடைமை; முடிவிலா ஆற்றல்; வரம்பில் இன்பம் உடைமை, ஆகிய இப்பண்புகள் எட்டும் மண்ணுலக மானிடனிடத்திலும் இடம் பெற்றிருக்கக்கூடியனவே; ஆகவே என்.குணத்தானைத் தேவர் உலகில் தேடத் தேவையில்லை; ஈண்டே கண்டுகொள்ளலாம். ஆகவே, என்குணத்தானும் ஆரிய வழிபாட்டுக் கடவுள் அல்லன். ஆக, மனிதன் மனிதனாக, வாழ்வாங்கு வாழ என்னென்ன பண்புகள் தேவையோ, அப்பண்புகளையே அவற்றை உடையவனாக உருவகித்துக் கூறியிருப்பதே வள்ளுவரின் கடவுட் கொள்கையாம். رسیده ۹۳۹- تعییا 51