பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. வள்ளுவர் வளர்த்த மரஇனமும் மாவினமும் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தவர் வள்ளுவர். அதனால், புல், பூண்டு, மரம், செடி, கொடி, முதலாம் மரவகைகளையும், ஊர்வன, நடப்பனவாகிய மா வகை களையும், பறப்பனவற்றையும் அ றி ந் து , அறிந்த அவற்றைத், தம் குறளில், பொருள் விளக்கத்துணையாக, ஏற்ற இடங்களில், ஏற்றவாறு எடுத்தாண்டுள்ளார். எள் : நெல்லரிசி, புல்லரிசி, வரகு, தினை, சாமை, சோளம், போலும் கூ ல வ ைக க ளி ல் நனிமிகச்சிறியது எள். அவ் வெள்ளை அடுக்கி வைத்தாற்போல் அகத்தே அடக்கி வைத்திருக்கும் காயும் சின்னம் சிறிது: அக்காய் முற்றிய நிலையில் அகத்தேஉள்ள கறுத்த எள் புறத்தே வெளிப்பட வெடிக்கும் அக்காயின் வாயோ, நனிமிகச்சிறியது. அப்பிளவு கண்ணுக்கும் புலப்படா அத்துணைச் சிறியது. அந்தப்பிளவை, வ ள் ளு வ ர் , மிகப்பெரிய, அரிய உண்மையை விளக்கப் பயன்கொண்டுள்ளார். உட்பகை. கண்ணுக்குப்புலப்படாது; க ரு த் ைத யு ம் குருடாக்கும் புறத்தே, உற்றார் போலவும், உறவினார் போலவும். . நட்டார். நல்லார் போலவும் நடித்துக்கொண்டே, அகத்தே வளரும்பகை, தொடக்ககாலத்தில் மிகமிகச்சிறிதே எனினும், காலப்போக்கில், பெருகி,அப்பகைக்கு உள்ளானவர், எவ்வளவு பெரியவல்லவராயினும் இல்லாமல் செய்துவிடும்; அரம் - சிறியதுதான்; ஆனால் அது கடின இரும்பையும் அறுத்துத் துண்டாடிவிடும். அது போன்றதே இது.