பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்தகையபேரழிவு தரும் பேராற்றல் வாய்ந்த உட்பகையின் தொடக்ககாலச் சிறு மை யை விளக்க வள்ளுவர்க்கு, ஒருபொருள் தேவைப்பட்டது. எவ்வளவு சிறியபொருளையும், அதன் உருவச்சிறுமை கண்டு புறக்கணிப்பவர் அல்லர் அவர். அதனால் வடிவில்சிறிய" எட்காயின், வாய் வெடிப்பைத் தேடிக்கொண்டார். 'எட்பகவு அன்னசிறுமைத்தே ஆயினும் உட்பகை உள்ளதாம் கேடு’ (889) என்ற குறலில் இடம்கொடுத்து விட்டார். புல்: நீர் சிறிதேகிடைக்கினும் தலைகாட்டி, அதுசிறிதே வற்றினும் சுருண்டுபோகும் மென்மை வாய்ந்தது புல். * புல்லறிவு' (சிற்றறிவு) (331); புல் அவை’ (அறிவிலார் கூட்டம்) (119,846) என்பனபோலும் இடங்களில் ஆளப்பட்டு இழிக்கப்படுவது. அந்தப் புல்லை, எவ்வளவு பெரும் பொருளை விளக்கக் கையாண்டுள்ளார் வள்ளுவர் காண்க. மழையின் சிறுதுளி விழவில்லை என்றால், புல்லே தலை காட்டாது என்ற நிலையில், மழையின்றி வாழமாட்டா, வான்நோக்கிவாழும் உலகத்துப் பலகோடி உயிர்களின் நிலை என்னாகும், என்ற கேள்வியை எழுப்புவுதன் மூலம், மழையின் பெருமையைக் காட்டக் கையாண்டுள்ளார் புல்லை. "விசும்பின் துளிவிழின் அல்லால்மற்று ஆங்கே, பசும்புல் தலைகாண்பது அரிது’’ (குறள்-16). கரும்பு: ... • - - கயவர்; எனினும் கணக்கிலாச் செல்வத்திற்கு அதிபதி. செல்வம் பிறர்க்குப் பயன்பட்ட வழியே அதற்குச் சிறப்பு. 53