பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செல்வத்தின் இவ்வியல்பை எடுத்துக்கூறிய அளவிலேயே, வருவார்க்கெல்லாம் வாரிவழங்கிவிடுவாரா கயவர் என்றார் இல்லை. அவர்களை வருத்தினால் அல்லது, கொல்வது போலும் கொடுந்துயரைக் கொடுத்தால் அல்லது, அவர் பால் உள்ள செல்வம் வெளிவராது! இந்த உண்மையை விளக்க, இனிய சாற்றை நிறையக்கொண்டது: அச்சாற்றைக் காய்ச்சினால், கருப்பட்டியும், கற்கண்டும் தரவல்லது; ஆனால் அவற்றைத் தானேகொடுத்துவிடாது, தன்னை ஆலையில், இட்டு இறுகக் கசக்கிய வழியே பயன்தர வல்லதாம், கரும்பு கைகொடுத்தது வள்ளுவர் க்கு. 'கரும்புபோல் கொல்லப் பயன்படும் கீழ்' (குறள்-1078) குன்றி. நல்லவர்போல் காட்சி நல்குவார் அனைவரும் நல்லவர் ஆகிவிடார். உற்று நோக்கினால், அவருள் சிலர், அகத் தூய்மை அற்றவராகவே இருப்பதை அறியலாம் இது உலகியல். நல்லவர்போல் நடிக்கும் நல்லவர் அல்லார் நடமாடும் உலகம் இது. இந்த உண்மையை விளக்க, திருவள்ளுவர்க்குத் துணைசெய்தது, பார்த்தஅளவில் கண்களுக்குப் பளிச்செனத் தன்செந்நிறத்தை மட்டுமே காட்டி, கையில் எடுத்து உற்றுநோக்கிய வழி, முனையில் உள்ள கரிய நிறத்தைக் காட்டும் குன்றிமணி. “புறம் குன்றி கண்டனையரேனும், அகம்குன்றி மூக்கில்கரியார் உடைத்து’ - (குறள் 277) மலைபோல் நிலைகுலையா மாந்தர்கள்தான்; ஆனால் அவர்களும், நிலைகுலைவதற்குக் காரணமாம் செயல் பாட்டில் சிறிதே செய்துவிடுவராயின், மடுப்போல் தாழ்ந்து போவர். இந்த உண்மையை விளக்கும் குறட்பாவில், மாந்தரின் உயர்ந்த நிலையை உணர்த்த, குன்று கை 54