பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெருஞ்சி மு ள் வளி ன் இக்கொடுமையை உணர்ந்த வள்ளுவர், அதன் துணையை நாடி இருக்கும் இடம் நனிமிக நீயத்தற்குரியது. தான் காதலித்த ஒரு பெண்ணின் ஒவ்வோர் உறுப்பு நலத்தையும் நாவாரப் பாராட்டுகின்றான் ஓர் இளைஞன். அவ்வாறு பாராட்டும் நிலையில், அவள் காலடியைப் பாராட்டு வதாக ஒரு குறள். மலர்களில் மென்மையானது அணிச்சமலர் (அதன் இயல்பு பின்னர் தனியே விளக்கப்படும்). அதேபோல், பறவைகளின் இறகுகளில் நனிமிக மென்மை யானது அன்னப்பறவையின் இறகு படுக்கை மெத்தென இருக்க அன்னத்தின் தூவியைப் பரப்புவது வழக்கம். ('அன்னத் தூநிறத் தூவி, இணையணை மேம்படப்பாயணை இட்டு”) நெடுநல்வாடை (132-133); சேக்கையுள் துணை புணர்அன்னத்தின் தூவி .ெ ம ல் ல ைண அசைஇ' கலி: 72: 1-2). மாதர்கள் அடியின் மென்மைக்கு, உவமையாக, இவ்விரு பொருள்களையும் கூறுவது புலவர்களின் பண்பு. ஆக, மென்மைக்குப் பெயர்போன அனிச்சம்பூவும், அன்னத்தின் துவியும் கூட, என் காதலியின் காலடிக்கு நெருஞ்சிமுள் போன்றதாம், எனக்கூறி, அவன் காதலியின் மென்மைத் தன்மையை மேலும் சிறப்பித்துள்ளான், எனப்பாடியதன் மூலம், நெருஞ்சிக்கு நல்லதோர் இடத்தைத் தேர்ந்து அளித்துள்ளார். - "அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் - அடிக்கு நெருஞ்சிப் பழம்' (1120) என்பது அத்திருக்குறள், 56