பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளிக்கொடி: வள்ளிக்கொடி, வற்றா நீர்வளம் ேவ ண் டு வ து. நாள்தோறும் நீர் பாய்ச்சவேண்டியது. ஒருநாள் மறக்கினும் வாடி விடும் இயல்புடையது. அத்தகு வள்ளிக்கொடியின் அடிவேரையே அறுத்துவிட்டால் என்னாம்: நீரே யூகித்துக் கொள்க. வள்ளிக்கொடியின் இம்மெல்லியல்பை, தான்செய்து விட்ட ஒரு தவறு காரணமாகத் தன்னோடு ஊடிப்பிணங்கி இருக்கும் தன்காதலியைக் கூறுவன கூறி, அவள் பிணக்குத் தீர்க்கத் தவறிய ஒருகாதலன் செயலுக்கு உவமைகாட்ட எடுத்தாண்டுள்ளார். "ஊடிய வரை உணராமை வாடிய வள்ளிமுதல் அரிந் தற்று” (1304) மரங்கள் வள்ளுவர் மாங்களின் இனத்தையே அறிந்துள்ளார். ஆனால், அவர், தம்குறளில் கூறியுள்ள மரங்கள் சிலவே அவை, நச்சுமரம், பயன்மரம், மருந்தாம்மரம், முள்மரம் ஆகியன. நச்சுமரம் - - ஊர்நடுவே, ஓங்கி வளர்ந்த, நன்குதழைத்த நச்சுமரம் ஒன்று நிற்குமாயின், அதனை எவரும் விரும்பார் என்பது மட்டும் அன்று; அறியாதே, அதன் இலையையோ,பூவையோ, பட்டையையோ யாரேனும் தின்றுவிடுவராயின், உண்டார் உயிரையே போக்கிவிடும் நச்சுமரத்தின் இயல்பு.இது. ஊரில் உள்ள ஒருவராலும் விரும்பப்படாதவன் மட்டும் அன்று. அனைவராலும் வெருக்கப்படுவன்; அதாவது ஊருக்கே பகைவன், அத்தகையான்பால் பெருஞ்செல்வம் 57