பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குவிந்து விடுமாயின், அது, அவ்வூராரால் விரும்பிடாது வெறுக்கப்படும் என்பது மட்டும் மன்று, ஒரோவழி அவர் அழிவுக்கு, அது பயன்படுத்தப் பெறவும் கூடும் இத்தகு பொருள் இயல்பை விளக்க, அத்தகு நச்சுமரமும் வள்ளுவர்க்கு மட்டும் கைகொடுத்து உதவி உயர்வு பெற்றுவிட்டது. 'நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள் நச்சுமரம் பழுத் தற்று' (குறள் 1008) பயன் மரம் - மா, பலா, நெல்லி, போலும் இனிய கனிகள் தரும், மரங்கள், ஊர்நடுவே வளர்ந்து நிற்குமானால், அவை, அவ்வூரார் அனைவர்க்கும் பயன்படும். அத்தகு பயன்தரு மரங்களை, நாட்டவர் அ ைன வ ர் க் கும் உதவ வேண்டும் என்ற நல்லுள்ளம் வாய்ந்த நயனுடையான்கண் குவிந்து கிடக்கும் செல்வங்களுக்கு உவமை காட்டியதன் மூலம், அம் மரங்களின் பயனை வள்ளுவர் பெற்றுள்ளார். பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம் நயனுடை யான் கண்படின்' (குறள் 216) மருந்து மரம்: "அன்பு உடையார் என்பும் உரியர் பிறர்க்கு’ என்பது குறள் (72). . 'தங்குறை தீர்வுஉள்ளார்; தளர்ந்து பிறர்க்குஉறாவும் வெங்குறை தீர்க்கிற்பார் விழுமியோர்-திங்கள் (தன்) கறையிருளை நீக்கக் கருதாது, உலகின் நிறையிருளை நீக்கும் மேல்நின்று' என்பது நன்னெறி, செல்வமானது, பெருந்தகையாளர்பால் சேர்ந்துவிடின், அது, உலகத்தவர் எல்லார்க்கும், எல்லாக் காலத்தும், எளிதில் பயன்பட்டுவிடும். இந்த உலக உண்மையை விளக்க, வள்ளுவர்க்கு உறுதுணையாக நின்றது; தன் வேர். அடிமரம், 58