பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனிச்சம்: தொட்டால் சுணங்கி என்ற ஒரு சிறுசெடி உண்டு. வயல் வரப்புகளில் முளைத்துக்கிடக்கும் நரம்பின் இரு பக்கங் களிலும், சின்னஞ்சிறு இலைகள் வரிசையாக இருக்கும். அவற்றை நம் நுனிவிரலால் மெல்லத் தடவியவுடனே சுருண்டு விடும். அதுபோன்ற மலர் அனிச்சம். அது மிகமிக மென்மையானது. அதை ஒருவர் பறித்து அதன் மணத்தை நுகர முக்கருகில் கொண்டுசென்ற அளவே குழைந்து வாடி விடும். அத்துணை மென்மையானது. விருந்தினரைச் சேய்மைக்கண் கண்டவுடனே இன்முகம் காட்டி, அண்மையில் வந்தவழி இன்சொல் கூறி. வரவேற்று, இனியன பலஅளித்து ஒம்புதல் வேண்டும். 'சேய்மைக் கண் கண்டுழி இன்முகமும், அதுபற்றி ந ண் ணி ய வ ழி இன்சொல்லும், அதுபற்றி உடன்பட்ட வழி நன்றாற்றலும் என விருந்து ஒம்புவார்க்கு இன்றியமையா மூன்று’ என்பர். பரிமேலழகர். அதற்குமாறாக, அவர்களைச் சேய்மைக்கண்ட வழியே, கடுத்தமுகம் காட்டிவிடுவராயின், விருந்தினர் அதுகண்டே கலங்கிப் போய்விடுவர். இந்த உண்மையை விளக்கவந்த வள்ளுவர், அனிச்சமலரைச், செடியிலிருந்து ப றி த் து முகத்தருகே கொண்டுசென்று முகந்தவழி தான் வாடும்: ஆனால் விருந்தினர்களோ, சேய்மைக்கண் வரும்போதே கடுத்த முகம்கண்டு வாடிப்போவர் எனக்கூறி, அனிச்சத்தினும் மெல்லியர் விருந்தினர் என விருந்தினரின் மென்மையைக் கூற, அனிச்சமலரின் உதவியை நாடியுள்ளார் ஓரிடத்தில், "மோப்பக்குழையும் அனிச்சம், முகம் திரிந்து நோக்கக் குழையும் விருந்து' (குறள்:90) 62