பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன் காதலியின், மென்மைத்தன்மையை எ டு த் து இயம்புவான் ஓர் இளைஞன் வாய் வழியாக, 'அனிச்சமே! நீ மிகவும் மென்மைத்தன்மை வாய்ந்தவைதான்; வாழ்க நீ; ஆனால் என் க | த லி நி ன் னி னு ம் மென்மையானவள்' எனக் கூறச்செய்து அனிச்சத்தின் .ெ ம ன் ைம ைய விளக்கியுள்ளார். - நன்னிரை வாழி! அனிச்சமே! நின்னினும் மெனனிரள் யாப் வீழ் பவள்” (குறள்:1111) அதே இளைஞனை, "என் காதலி, அனிச்சம்பூவை அணிந்து கொண்டாள்; அதிலும் அவற்றின் காம்புகளைக் கிள்ளி எறிந்துவிட்டுத்தான் அணிந்து கொண்டாள்; என்ன சொல்வேன்! அதற்கே தாங்கமாட்டாது இவள் இடை முறிந்து போவாள்போலும்; இடை முறிந்துபோக மங்கல பறை ஒலியாபோலும்; அதாவது இறந்துபோக சாப்பறை ஒ லி க் கு ம் போ லு ம் ' எனப் புலம்பச்செய்ததன் மூலம் அனிச்சத்தின் மென்மையை இரண்டாவது முறையாக உணர்த்தியுள்ளார். 'அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள், நுசுப்பிற்கு நல்ல படாஅ பறை' - (குறள்: 1115) "மென்மைக்குப் பெயர்போன அனிச்சமலரும், அன்ன்ப் பறவையின் துவியும் கூட, மகளிர் அடிக்கு நெருஞ்சி முள்ளாகும்' எனக்கூறி அணிச்சத்தின் மென்மையை மேலும் விளக்கியுள்ளார் வள்ளுவர். 'அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம்' - (குறள்:1120) குவளை: 'அணிகள் பல அணிந்து அழகோவியமாய் நிற்கும் என் காதலியின் கண்களை ஒருமுறை கண்ணுற்று விடுமாயின், 63