பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவள் கண்களுக்கு நாம் நிகராகமாட்டோம் என உணர்ந்து’’ தோல்வியால், தலைதாழ்த்தி நிலம்நோக்கி நின்றுவிடும் எனக்கூறும் முகத்தான், குவளைபால் இரக்கம் காட்டியுள்ளார் வள்ளுவர். 'காணில், குவளை, கவிழ்ந்து நிலம்நோக்கும் மாணிழை கண் ஒவ்வேம் என்று’’ (குறள்-1114) நீர்ப்பூவைக் காட்டிய வள்ளுவர், கொம்புகளில் மலரும் மலரையும் காட்டியுளளார் ஓரிடத்தில் கோட்டுப்பூ(குறள்-1313) மலர்களின் இயல்பு: இவ்வாறுதனிமலர்களின் இயல்புகளை எடுத்துக்காட்டிய வள்ளுவர், அம்மலர்களின் பொது இயல்புகள் சிலவற்றையும் விளக்கியுள்ளார். மலர், மலராகவே திடுமென மலர்ந்து விடுவதில்லை; அரும்பாகி, பின்னர்ப் பேரரும்பாகிப் பின்னரே மலரும். இந்த இயல்பையும் உணர்த்தியுள்ளார், 'காலை அரும்பி பகலெல்லாம் போதாகி மாலை மலரும் இந்நோய் (குறள்-1227) அதேபோல், மலர்மலர்ந்த பின்னர்தான். அம்மலருக்கு மணம் உண்டு என்பதில்லை. மலரும் பருவத்துப்பேரரும்பாக இருக்கும்போதே மணம் அவ்வரும்பினுள் புகுந்துகிடக்கும் என்பதையும் அறிந்து அறிவித்துள்ளார். "முகைமொக்குள் உள்ளது நாற்றம்" (குறள்:1274), இந்த உண்மையை உணர்த்துமிடம் அருமையானது. . . 'பெண் சிரித்தால் போச்சு’’ என்பது நாட்டுமொழி; ஒரு இளம்பெண், ஒர் இளைஞனைப் பார்த்து சிறிதே புன்முறுவல் காட்டுவளாயின், அப்புன்முறுவலில், அவள்.அவள்பால் காதல் கொண்டுவிட்டாள் என்ற அறிய உண்மை அடங்கியிருக்கும் 64