பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது’’’ (குறள்: 481) காக்கையின் துணையை இரண்டாவது முறையாக நாடியிருப்பது, ஒருவனுக்கு ஆக்கமும் புகழும் எப்பொழுது உண்டாகும் என்ற வினாவிற்கு விடையளிக்கும் இடத்தில். தன் பால் உள்ளது சிறிதே யாயினும், அதைத்தன் சுற்றத்தாரோடு கூடியிருந்து உண்பவனுக்கே ஆக்கமும் புகழும் சேரும் என அறிவுரை கூறும்பொழுது,"அதோ காண்! கிடைத்த இரை சிறிதேதான்! அதைக் கண்ணுற்றதும் ஒரு காக்கைதான்! ஆனால், அது,அந்த இ ை ைய த் த ேன தின்றுவிடக் கருதாது, தன் இனத்தையெல்லாம் கரைந்து அழைத்து ஒன்றுகூடி அமர்ந்து உண்ணுவதை” என அக்காட்சி ந ல த் ைத க் காட் டி, அக்காட்சி நலத்திலும் காக்கையின் கரை ஒலியிலும் கரைந்து உருகிப்போய் விட்டார் வள்ளுவர். 'காக்கைகரவா கரைந்து உண்ணும் ஆக்கமும் அன்ன நீரார்க்கே உள' (குறள்: 527) கொக்கு: 'ஒடுமீன் ஒட உறுமின்வரும் அளவும் வாடி இருக்குமாம் கொக்கு' கொக்கின் இயல்புகளில் ஒன்று இது; அதன் வேறோர் இயல்பை, ஏற்ற இடத்திற்குப் பயன்படுத்தி யுள்ளார் வள்ளுவர். வினை செய்வார்க்குக் காலத்தின் துணை தனிமிக இன்றியமையாதது; எடுத்த வினையை எடுத்து முடிப்பதற்கு ஏற்புடைய காலம் வரும்வரை அப்படியொரு முயற்சி தமக்கு இருப்பதாகவே வெளிக்காட்டாமல் அடங்கி யிருத்தல் வேண்டும். ஏற்புடைய க | ல ம் வந்துற்றதும், விரைந்து செயலாற்றி அவ்வினையை முடித்துக் கொள்ளுதல் வேண்டும், ஒருவினையினை செய்வார் காலம் அறிய 66