பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேண்டியதன் இ ன்றி ய ைம ய ர ைம யி ைன விளக்க வள்ளுவர்க்குக் கொக்கின் துணைவேண்டியதாயிற்று. நீர் நிலைகளின் கரைகளில் கொக்கு அமர்ந்திருக்கும், அதற்கு அணித்தாக, அது விரும்பும் மீன் வரும்வரை ஆடாமல் அசையாமல் உறங்குவதுபோல் நின்றுகொண்டே இருக்கும், ஆனால், அது எதிர்பார்த்திருந்த மீன், அதன் அருகே வரக் கண்ட அளவே, அதை விரைந்து குத்தி எடுத்துக்கொண்டு விரைந்து பறந்தோடிவிடும். வினையாற்றுவானுக்கு ஏற்ற உவமையை எடுத்துக்காட்டிய வள்ளுவர் திறம்வியந்து பாராட்டற்குரியது. "கொக்கு ஒக்ககூம்பும் பருவத்து; மற்று அதன் குத்துஒக்க சீர்த்த இடத்து’’ (குறள்-490) ! புள்: புள் என்பது பறவையினம், அதிலும் கூடுகட்டி வாழும் பறவை இனத்தைக்குறிக்கும் பொதுவான சொல். அத்தகு புள்இனத்தை இரண்டு இடங்களில் அறிமுகம் செய்துள்ளார் வள்ளுவர். தலைமுடியை நீட்டலும்; மழித்தலும், நீர் பலகால் மூழ்கலும், காவியுடுத்தலும், கமண்டலமும், தண்டமும் ஏந்தலும் ஆகிய தவவேடம்பூண்டு, தவசிபோல் காட்சி அளிக்கும் அதே நிலையில், தவநெறிக்கு புறம்பான நெறியில் நடைபோடும் ஒருவன்செயல். வேட்டுவன் ஒருவன், பறவைகள்பால் இரக்க உணர்வு உடையான்போல் அவை விரும்பி உண்ணும் உணவைப் பரவலாக வீசிவைத்துவிட்டு, அதை உண்ணவரும் அவற்றை அகப்படுத்தும் கருத்தோடு, அடர்ந்த புதருக்குள் மறைந்திருந்து புட்களின் வருகையை எதிர்நோக்கி இருப்பதுபோலாம் - எனக்கூறி. அப்பறவை களுக்கு இரக்க உணர்வு காட்டியுள்ளார் ஓரிடத்தில். 'தவம் மறைந்து அல்லவை செய்தல் புதல் மறைந்து வேட்டுவன் புள்சிமிழ்த் தன்று' (274) 67