பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடலுக்கும் உயிர்க்கும் உள்ள உ ற வு யாது என கேட்போர்க்கு, விடையாக, பறவை கூட்டிற்கும் அக் கூட்டினுள் வாழும் ப ற ைவ க் கு ம் உண்ண உறவு எத்தகையதோ, அத்தகையதுதான்; உயிர் பிரிந்துவிட்டால், உடலால் பயன் இல்லை. பறவை பறந்து விட்டால் அக் கூட்டால் பயன் இல்லை; எனக்கூறி, நிலையாமையை நன்கு உணர்த்த, நல்லதொரு துணையாகக்கொண்டுள்ளார், புள்ைை பிரிதோரிடத்தில் வள்ளுவர், 'குடம்பை தனித்து ஒழியப் புள்பறந்தற்றே; உடம்போடு உயிரிடை நட்பு’’ (338) மயில்: இளையாள் ஒருத்தியைக் காதலித்து, அவளைப் பார்த்த அளவிலே, 'இவள், கண்டாரை விடுத்து கடவுட் கன்னிகை யாம் அணங்கோ, அல்லது, கண்டார்க்குக் களிப்பூட்டும் அழகிய மயிலோ?' என வியந்து நிற்கும் நிலையில் மயிலை அறிமுகம் செய்துள்ளார் வள்ளுவர். "அணங்கு கொல், ஆய் மயில் கொல்?" (1081) - ஊர்வன: ஆமை: "அடக்கம் அமரருள் உய்க்கும்' என அடக்கத்தின் பெருமை பாடவந்த வள்ளுவர். அடக்கமாவது யாது அதனாலாம் பயன் யாது என்ற வினாவிற்கு விடையளிக்கும் நிலையில், தனக்கு ஏதேனும் கேடுவரும் என உணர்ந்த தன்தலை, நான்கு கால்கள் ஆகியவற்றைத் தன் ,لهsTGېى முதுகாம் ஒட்டுக்குள் அடக்கிக்கொண்டு தன்னைக்காத்துக் கொள்ளும் ஆமைபோல் தன் ஐம்பொறி வாயிலாக எழும் ஐந்து ஆசைகளையும், தன்மனத்தையாம் பெட்டகத்துள்ளே அடக்கிக் கொண்டால். அவ்வடக்கம், அவனுக்கு இம்மையில் மட்டும் அன்று, அவன் எடுக்க இருக்கும் ஏழுபிறவியிலும் 68.