பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ந ல் ல .ெ த ரு பாதுகாப்பாகும் எள விடையளித்து, அடக்கத்திற்கு அழகியதோர் எடுத்துக்காட்டாக ஆமையைக் காட்டியுள்ளார். 'ஒருமையுள் ஆமைபோல் ஐந்து அடங்கல் ஆற்றின்; எழுமையும் ஏமாப்பு உடைத்து’’ (126) எலி: எலியையும் மறக்கவில்லை வள்ளுவர். அதேநிலையில் அ வ ற் ைற மதிக்கவும் இல்லை; படை எண்ணிக்கையில் பெரியதுதான்; ஆனால் ஆற்றல் அற்றது. ஆயின் படையின் எண்ணிக்கைப் பெருக்கம் பயன்தராது ஆற்றல்மிகு வீரன் ஒருவன். அப்படைமுன் தோன்றுவனாயின், அப்படை அறவே அழிந்துவிடும். படையின் இம்மாட்சியை விளக்க வந்த வள்ளுவர், எலிக்கூட்டம் கடல்போல் திரண்டுவந்து பெருங்கூச்சல் எழுப்பிக்கிடந்தாலும், ஒரு நாகப்பாம்பு, அ வ ற் றி ன் அருகே செல்லக்கூடத் தேவையில்லை; தொலைவில் இருந்தவாறே பெருமூச்சு விடுமாயின்; எலிக் கூட்டம் எனக்கூறியுள்ளார். 'ஒலித்தக்கால் என்னும் உவரி எலிப்பகை? நாகம் உயிர்ப்பக் கெடும்’ (163) என்பிலது: நத்தை, மரவட்டை போல்வன எ ன் பி ல து என்ற உயிரனத்தைச் சேர்ந்தவை. 'அன்பின் வழியது உயிர் நிலை அறக்கடவுள் எவ்வுயிர்மாட்டும் விருப்பு வெறுப்பு அற்றவன்; உடலை இடமாகக்கொண்ட உயிர். அன்பை மறந்துவிடுமாயின்; மறந்துவிடும் தன் செயலாலேயே அறக் கடவுளின் சினத்திற்கு ஆளாகித்தானே அழிந்துபோகும். அன்பின் சிறப்பையும், அதை மறக்கும் உயிர் அறக்கடவுள் 69