பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சினத்திற்குத்தானே ஆளாகித்தன் அழிவிற்குத்தானே காரண மாகும் இப்பேருண்மையை விளக்க, வள்ளுவர்க்குத் துணை வந்துளது என்பிலா ஒர் உயிர். ஞாயிறு விருப்பு வெறுப்பு அற்றவன். எந்த உயிரையும் தேடிச்சென்று, தன் வெப்பத் தால் கொடுமை செய்பவன் அல்லன்; ஆனால் எலும்பில்லா உயிர்கள் தாமாகவே ஊர்ந்து சென்று, ஞாயிற்றின் வெயிலின் முன் கிடந்துவிடுமாயின்; அஞ்ஞாயிற்றின் வெயிலால் சுருண்டு உயிரிழந்துபோகும். இந்த உண்மையை எடுத்துக்கூறி, தன்மை மறந்த உயிர்படும் அவலநிலையை விளக்கியுள்ளார் வள்ளுவர். என்பு இலதனை வெயில் போலக்காயுமே, r அன்பு இலதனை அறம்' (77) பாம்பு: பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்ப: அந்தப் பாம்பையும், தம் பொருள் விளக்கத்திற்குப் பயன் கொண்டு உள்ளார்; ஓரிடத்தில் அன்று இரண்டு இடத்தில் ஒன்று எலிப்பகையைப் பற்றிக் கூறிய இடத்தில். (763) ஆகவே. அதை மீண்டும் கூறத்தேவை இல்லை. இரண்டாவது இடம், உள்ளத்தால் இரண்டுபட்டு, ஆனால் புறத்தே ஒருவர்போல், நடிக்கும் உட்பகையுடையார் இயல்பினை விளக்கும் இடம். அத்தகையார் வாழ்க்கை ஒரே சிறு குடிசையுள் ஒருவர், பாம்போடு கூடிவாழ நேர்ந்தால் எத்தகையதாமோ, அத்தகையதாம்! எந்நேரத்தில் பாம்பு பாய்ந்து விடுமோ என்ற அச்சம் வாழ்பவனுக்கு. எந்த நேரத்தில்தான் அடிக்கப் பட்டுவிடுவோமா. என்ற அச்சம் பாம்புக்கு அதனால் இருவர்க்குமே எ ந் நேர மும் அச்சமே தலைதுாக்கி நிற்கும் எனக்கூறுவதன் மூலம் உட்பகையுடையார்களின் அச்சமரு, வாழ்க்கையை எடுத்துக்காட்டியுள்ளார். 70.