பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'உடம்பாடு இல்லாதவர் வாழ்க்கை, குடங்கருள் பாம்போடு உடன்உறைந் தற்று' (890) முதலை: ஒர் உண்மையைக் கூறி, அதன் மூலம் பிறிதோர் உண்மையை விளக்கும் வித்தகர் வள்ளுவர். ஒருவர் தமக்குரிய இடத்திலேயே இருப்பராயின், அவ்விடத்தில், தம்மினும் வல்லவரையும் வெற்றி கொண்டு விடுவர். அதற்கு மாறாக அவர், தம்மிடம்விட்டு வெளிவந்து விடுவராயின். శిశుఅ அவரை அவரினும் ஆற்றல் குறைந்தவனே அழித்து விடுவர். இந்த உண்மையை விளக்க விரும்பினர் வள்ளுவர் அதற்கு அவர்க்குத், துணைவந்தது முதலை. ஆழமான நீர்நிலைகளே முதலையின் வாழிடம். அது அங்கு வாழும்போது, ஆங்குவரும் எவ்வளவு வல்லமை வாய்ந்த உயிர்களையும், வாயால் கெளவி ஈர்த்துக்கொன்று தின்றுவிடும். முதலை வாய்ச்சிக்கிய யானையைக் காக்க திருமாலும், சிறுவனைக்காகச் சிவனும் ஓடிவர வேண்டி நேர்ந்த புராணக்கதைகள் ஈண்டு நினைவுகோடற்குரித்து. ஆனால் முதலை, நீர்நிலை விடுத்து நிலத்திற்கு வந்து விடுமாயின், க r க் ைக , கழுகுபோலும் பறவை இனமே அதைக் குத்திக் கொன்றுதின்றுவிடும். முன்னர்க்கூறிய Gມoranusວມ விளக்க, இந்தக் கண்கூடு நிகழ்ச்சியைக் காட்டியுள்ளார் வள்ளுவர். 'நெடும்புனலுள் வெல்லும் முதலை, அரும்புனலின் நீங்கின் அதனைப் பிற’’ (495) 71