பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- தடப்பன: களிறு: சொற்சுருக்கத்தில் கருத்துடைய வள்ளுர்க்குக் களிற்றின் இயல்பை விளக்கமட்டும் எட்டு குறள்கள் தேவைப்பட்டுள்ளன. 1) அவரவர் அவரவர்க்குரிய இடங்களில் இருப்பின் வலிமிகும், தம்மிடம்விட்டு வெளிப்போந்து விடுவாராயின் வலிகுறையும் என்ற உண்மையை விளக்க, வள்ளுவர்க்கு முதலையின் துணை ஒன்றுமட்டும் போதவில்லையோலும்! யானையின் துணையையும், ஏன், நரியின் துணையையும் நாடியுள்ளார். போர்க்களமாயின், எதிர்த்துவரும் வேல்வீரர்களைத் தொங்கும் கையால் தாக்கிக் கோட்டில் குத்திக் கோத்துக் கொண்டு களமெல்லாம் வெற்றி உலாவரவல்லது களிறு. அதே களிறு, கால்வைத்தவுடனே தன்னகத்தே ஈர்த்துக் கொள்ளும் இயல்புடைய களர் நிலத்தில் அடியிட்டுவிட்டால், அக்களரு. அக்களிற்றை தன்னகத்தே ஆழ்த்திக்கொள்ள, அந்நிலை கானும் நரி, அதிலும், காட்டில் களிற்றைக் கண்டதும் காணாதுாரம் ஓடிஒளியும் குள்ளநரி, சிறுகக்சிறுகக் கடித்துக் கடித்துக் கொன்று தின்றுவிடும் என்ற உலகியல் நிகழ்ச்சியை எடுத்துக்காட்டி விளக்கியுள்ளார். 'காலாழ் களரில் நரி அடும்; கண்அஞ்சா வேலாள் முகத்த களிறு (500) 2) ஊக்கம் உடையவர். தாம்முடிக்க முன்னிய முயற்சிக்கு முட்டுக்கட்டை நேர்ந்தபோதும், சோர்ந்துவிடாது. எண்ணியதை எண்ணியாங்கு எய்தவே முயற்சிப்பர் இந்த உண்மையை விளக்கவும். களிற்றின் உதவியை நாடியுள்ளார் வள்ளுவர். களத்தில் நிற்கிறது. யானை அதை வளைந்து நிற்கும்வீரர்கள் ஏவிய, வேலும் அம்பும், அதன் உடல்முழுதும் 72