பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாய்ந்து ஊடுருவிக்கிடக்கின்றன. ஆனால் அந்நிலையிலும், சிறிதும் நிலைகுலையாது நிற்கும் களிற்றைக் காட்டியுள்ளார். வள்ளுவர், .. - . 'சிதைவிடத்து ஒல்கார் உரவோர்; புதையம்பிற் பட்டுப்பா டூன்றும் களிறு’’ (597) 3) உடல்வலியும், ப ைட வலி யு ம் உடையனாயினும் அவற்றை உடைய அரசன்பால் ஊக்கம் என்ற ஒன்று இல்லாயின் அவன் எதற்கும் அஞ் வேண்டி நேரிடும். இந்த உண்மை விளக்கவும், வள்ளுவர்க்குக் களிறு தேவைப்பட்டது; ஆனால், அப்பேறுண்டும் அஞ்சா. முன்னைய களிறு அன்று! ஊக்கம் இல்லா ஒரு களிறு, களிறு பருத்த உடல் வாய்க்கப் பெற்றதுதான்: அத்துடன் கூரிய இருகொம்புகளையும் உடையதுதான்; ஆனால் ஊக்கம் இல்லாதது; அதனால் தன்னினும் உருவத்தில் சிறிய தன்னைப்போலக் கொம்பு எதுவும் பெறாத! ஆனால் ஊக்கம், மிக்க புலியைக் கண் ட அ ள வே அஞ்சி ஓடிவிடும், ஊக்கம் உடைமையின் சிறப்பை விளக்க, ஊக்கம் குன்றிய களிறு தேவைப்பட்டது வள்ளுவர்க்கு. . . 'பரியது கூர்ங்கோட்டது. ஆயினும் யானை வெருஉம் புலிதாக் குறின்’’. (599) 4) பழகிய யானையக்கொண்டு பழகாத காட்டில் திரியும் புதிய யானைகளைப் பிடிக்கும் தொழில் கற்றவர். வள்ளுவர்! அதனால் ஒரு செயலைச் செய்துகொண்டு, இருக்கும்போதே. அச்செயல் து ைண ய ர ல், வேறு ஒரு செயலையும் முடித்துக் கொள்ளும் வித்தகத்திற்கு யானைபிடி தொழில் உவமைகாட்டியுள்ளார். 73