பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'வினையால் வினையாக்கிக் கோடல்; நனைகவுள் யானையால் யானையாத் தற்று." (678) 5) யானைப் போர்கண்டு பழகியவர் போலும் வள்ளுவர். கூடிவாழும் இயல்புடையவேனும் யானைகள் சிலசமயம் தமக்குள்ளே கடும்போர் இட்டுக் கொள்வதும் உண்டு யானைப்போர் காட் சி க் கு இனிது. ஆனால் அப்போர் இயல்பாக நடைபெறும். சமவெளியில் அப்போர் நிகழ் இடத்திற்கு அணித்தாக. நின்று காணல் கூடாது. போரிட்டுக் கொண்டிருக்கும் யானைகள், தம் பகை மறந்து போரைக்கண்டு களித்திருப்பார்மீது பாய்ந்துவிடும் அதனால் யானைப்போரை, அது நிகழும் இ ட த் தி ற்கு அணித்தாக உள்ள குன்றின்மீது நின்று காணவேண்டும், காரணம், யானை குன்றிலிருந்து இறங்கும்போது விரைந்து இறங்கி விடும். ஆனால் குன்றின்மீது ஏறஅது பெரிதும் இடர்ப்படும், ஆகவே குன்றின்மீது இருந்து யானைப்போர் காண்பார்க்கு இடையூறும் நேராது. பே ைர யு ம் இனிதே கண்டு களிக்கலாம். காட்டில் காணலாம், இக்கவின்மிகு காட்சியை. கையில் வேண்டும் பொருளை வைத்துக்கொண்டு, காரியம் பண்ணத்தொடங்குவான். அதை, இனிதே, இடையூறின்றி முடிப்பன் என்ற உலகியல் உண்மையை விளக்கத்துணை கொண்டுள்ளார். "குன்றேறி யானைப்போர் கண்டற்றால், தன்கைத்துதொன்று உண்டாகச் செய்வான் வினை' (758) 6) நல்லவீரன் பகைவன் இயல்பு அறியாது, போர் தொடுக்கமாட்டேன்; தொடுத்தல் அவனுக்குப் பெருமை சேர்க்காது; தன்னினும் மெலிந்தான்மீது போர்தொடுத்து, 74