பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவனை வெற்றிகொண்டு, தலைநிமிர்ந்து, உலாவருவதைக் காட்டிலும், தன்னினும் வல்லான்மீது போர்த்தொடுத்து, அவன்பால் தோல்வியுற்று, தலைதாழ்த்தி திரும்புவதே சுத்த விசனுக்கு அழகு, இதை விளக்க வ ள் ளு வ ர் க் கு வேட்டைக்காரர் இருவர் தேவைப்பட்டனர்; ஒருவன் காடு சென்று, வேட்டை ஆடிய முயலையும்; அதைக் கொன்ற அம்பையும் கையில் எடுத்துக்கொண்டு ஊர் திரும்புகின்றான். ஒருவன் காடு சென்று, கண்னெதிர்ப்பட்ட களிறு ஒன்றின்மீது தன்வேலை எறிய, யானை பிழைத்துக்கொண்டு ஓடிவிட யானையை ஓடவிட்ட அவ்வேலைக் கையில் தாங்கி வருகிறான். ஊர் எல்லையில், இருவரையும் கண்ட வள்ளுவர். யானைப்போகவிட்ட வேல் ஏந்தி வருவான் கழுத்தில் மாலையிட்டு வரவேற்கிறார் வள்ளுவர்; இதோ அவர் கூறுவது கேட்க! - 'கான முயலெய்த அம்பினில்; யானை . பிழைத்தவேல் ஏந்தல் இனிது' (772) 7) போர்க்களத்தில் ஓர் இனியகாட்சி; வீரன் ஒருவன் வேலேந்தி நிற்கின்றான்' அவன்மீது பாய வருகிறது ஒரு களிறு வீரன் தன்கை வேலை, அதன் மீது வீ சி ன ன் வேலேறுண்ட அவ்வேழம் இறந்து வீழ்ந்து விட்டது. அக் காட்சி நலம்கண்டு களித்திருக்கும் நிலையில் வேறோர்வேழம் அவன்மீது பாயத் தொடங்கிவிட்டது, கலக்கம் அதிகமாகி விட்டது. வீரனுக்கு, வேழத்தால் வீழ்த்தப்பட்டுப் போவேளே என்று அன்று பாய்ந்துவரும் வேழத்தின்மீது வீச வேலொன்று இல்லையே என்று; அந்நிலையில் எங்கிருந்து வந்த வேல் ஒன்று அவன் மார்பில் பாய்ந்தது; மகிழ்ச்சிக் கடலின் 75