பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எல்லைக்கே சென்றுவிட்டான் வீரன்; பாய்ந்த வேலைப் பறித்து எடுத்துப் பாய்ந்துவரும் வேழத்தின்மீது வீசி, அதை வீழ்த்தினான். இவ்வின்பக் காட்சிதான்; ஆனால் இரண்டு வேழங்களையும் பறிகொடுத்துவிட்டார் வள்ளுவர். "கைவேல் களிற்றொடு போக்கி வருபவன், மெய்வேல் பழியா நகும்’ (774) 8) மதம்கொண்ட யானை கண்ட இடம் எல்லாம் ஒடித் தொல்லை கொடுத்துவிடாது தடுக்க, முகபடாம் போட்டு சண் மறைக்கப் பெற்ற களிறு, வள்ளுவர் காட்டும் எட்டாவது களிறு. 'கடாகக் களிற்றின்மேல் முகபடாம்’ (1087) கவரி: 'மானம் இழந்தபின் வாழாமை முன்னினிதே' என்பது உலகியல் அறம்; அவ்வறநெறி உணர்ந்த ஆன்றோர், மானம் இழந்தபின் உயிர் வாழார் என்ற உன்மையை விளக்க, தன் உடலிலிருந்து ஒருமயிர் நீங்கினாலும் உயிர்வாழாத கவரிமானை உவமைகாட்டியுள்ளார் வள்ளுவர். 'மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார், உயிர்நீப்பர் மானம் வரின்' (969) தகர்: ஊக்கம் உடையவன்தான். ஆயினும் தான்எடுத்த முயற்சி இனிதே மு டி த ற் கு ஏற்றகாலம் வரும்வரை அடங்கி இருப்பான்; அவ்வடக்கத்தை அவன் தோல்வியாகக் கருதிவிடக்கூடாது; இந்த உண்மையை விளக்க தன் எதிர் நி ற் கு ம் ஆட்டின்மிது பாய எண்ணிவிட்ட ஆடுஒன்று, அ.த ன் மி து விரைந்து பாயும் வேகத்தினைப் பெறுவான் வேண்டா. சில அடிகள் பின்வாங்குவதைக் காட்டியிருக்கும்

  • 76