பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நயம் நயத்திற்கு உயரிது ஓரிடத்தில் ய ைன ப் போரைக் காட்டினார்; ஈங்கு ஆட்டுக்கிடாய்ப் போரைக்காட்டி யுள்ளார். 'ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதக்ர் - தாக்கற்குப் பேருந் தகைத்து' (486) பகடு: கடல்நீரால் விளைந்த உப்பை ஏற்றிக்கொண்டு மலைநாடு நோக்கிச் செல்லும் ஆரக்கால் பொருத்திய வண்டி பள்ளத்தில் ஆழ்ந்தபோது, அவ்வாறு ஆழ்ந்துபோதலைப் போக்கி ஈர்த்துச் செல்லும் பாரம் தாங்கும் பகடு 'கழிஉப்பு முகந்து நல்நாடுமருக்கும் ஆரைச் சாகாட்டு ஆழ்ச்சி போக்கும் உடன் உடை நோன்பகடு’ (புறம்:60)பாரம் மிகுதியால் வண்டிச் சக்கரம் ஆழ்ந்தபோக. மணல் பறக்கவும் கல் பி ள க் கவு ம். அவ்வண்டியை ஈர்த்துச் செல்லும் பகடு. "பண்டச் சாகாட்டு ஆழ்ச்சிச் சொல்லி, வரிமணல் மரக் கல்பக நடக்கும் பெருமிகப் பகடு’’ (புறம்:90) என்றெல்லாம் புகழப்படும் பகடு வள்ளுவர் பார் ைவ யி ல் மட்டும் படாது விரைந்து விடுமோ? வண்டியை ஈர்த்துச் செல்லுங்கால், இ ைட வழி யி ல் நேரும் இடையூறுகளையெல்லாம் பொருட்படுத்தாது. குறித்த இடம் சென்று சேரும் பகட்டினை ஒப்பானுக்கு, வந்துசேரும் இடுக்கண்கள் எல்லாம் தாம்தான் இடுக்கண் உற்றுப்போகுமேதல்லது, அவனுக்கு ஏதும் இடுக்கண் உறாது என கூறுமுகத்தான் அப்பகட்டி னுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார் வள்ளுவர். 'மருத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து’ (624) 77