பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி அ. சொல் இலக்கணம். உலகில் நனிமிகச் சிறிய பொருள் அறிவியல் வளராத வரை கடுகு, அறிவியல் வளர்ந்து விட்டநிலை யில் அணு. அளக்கலாகா ஆழமும் பரப்பும் உடையது கடல். ஒரு கடலின் வரப்பும் ஆழமுமே அத்தகையது என்றால் ஏழு கடல்கள் ஒன்று கலந்து விட்ட நிலையில் அவற்றின் ஆழமும், பரப்பும் அம்மம்மா! எண்ணிப் பார்க்கவும் இயலாதனவாம். அவ்வேழு கடல்களையும் கடுகு ஒன்றைத் துளைத்து, அதன் அகத்தே அடக்குவது அதனினும் அணுவை துளைத்து, அதனகத்தே அடக்கு வது அரிதினும் அரிது என்பதைச் சொல்ல வேண்டிய தில்லை. திருவள்ளுவர் இயற்றிய குறட்பா ஒவ்வொன்றின் அளவுச் சிறுமையும், அது கூறும் பொருட் பெருமையும் அக்குறட்பாக்களை அறிந்த புலவர் பெருமக்களைக் "கடுகைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக் குறுக தறித்த குறள்" என்றும், 'அணுவைத் துளைத்து, ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்தக் குறள்" எனறும் பாராட்ட வைத்துவிட்டன. அவ்வாறு பரந்த பொருளை சுருங்கிய வாய்ப்பாட் டால் கூறுவதால் பெருமை கொண்ட வள்ளுவப் பெருந்தகையார், சொல் இலக்கணத்திற்கு மட்டும், 1) அவை அஞ்சாமை 2) அவை அறிதல் 3) இனி யவை கூறல் 4) கேள்வி 5) சொல்வன்மை 6) பயனில சொல்லாமை 7) புறங்கூறாமை 8) வாய்மை என்ற அதி காரங்களை-அதாவது, எண்பது குறட்பாக்களை ஒதுக்கி l