பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உண்டஉணவு செரிக்கவேண்டும்; உணவைச் செரிக்க வைப்பது. உடலில் இயல்பாகவே உள்ள .ெ வ ப் ப ம், அவ்வெப்பம், உண்ணப்படும் உணவைச் செரிப்பதற்குஏற்ப மிகுவதோ குறைவதோ செய்யாது என்றும் ஒரே அளவினது அது. ஆகவே, அதன்அளவு அறிந்து, அதற்கேற்ற அளவு உணவையே உ ண் ண ேவ ண் டு ம். அதுஅறியாது, அவ்வெப்பத்தின் செரிக்கும் ஆற்றலுக்கு மேற்பட்ட உணவுகணை உண்பவனாயின், அந்த உண்வே ஊரிலுள்ள நோய்களை எல்லாம் அவன் உடலுள் புகுத்திவிடும். ஆகவே நீ அளவு அறிந்து உண்ணாமை நோய்க்குக்காரணம். "தீயன அன்றித் தெரியான்பெரிது உண்ணின், நோய் அளவின்றிப் படும்’ (947) வந்தபின் காப்பவனினும், வரும்முன் காப்பவனே அறிவாளி. நோய் இன்னின்ன காரணங்களால் வரக்கூடும் என்பதை அறிந்து, அதுவாராமைக்கு உரிய வழிமுறைகளை முன்கூட்டியே மேற்கொண்டுவிடுவனாயின், பின்னர் அவன் நடுங்க வரக்கூடியநோய் வாராமலே போய்விடும், "எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை; அதிர வருவதோர் நோய்' (429) ஆக வரும்முன்காப்பதில் விழிப்பாய் இருக்கவேண்டும். காலை, நண்பகல், இரவு என மூன்றுமுறை உணவு உட்கொள்வது உலகவழக்கு என்றாலும், ஒருவேளை உண்ட உணவு நன்கு செரித்துவிட்டது என்பதை அறிந்துகொண்ட பின்னரே, மறுவேளை உணவு உட்கொள்ள வேண்டும். உண்ணும் உணவும், அந்த இடைவெளிக்குள் செரிக்கும் -6- 81