பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உணவாகத் தேர்ந்து உண்ணவேண்டும். அவ்வாறு உண்பதை வழக்கமாகக்கொண்டுவிட்டால், நோய்வராது ஆகவே அது தீர்க்கும் மருந்தும் தேவை இரர்து. இதையும் உணர்த்தியுள்ளார் வள்ளுவர். 'மருந்துஎன வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்' (942) நம் உடலுக்கு நோய்களைத்தருவதும், நோய்வராமல் தடுப்பதும், உட்கொள்ளும் உணவே ஆகும். ஆகவேநோயற்ற வாழ்வு வாழவிரும்புவான் ஒரு வ ன் : உண்டஉணவு முழுமையாகக் செறித்து விட்டதைப் பசிஎடுப்பதால் அறிந்து கொண்டு, உடல் நலத்துக்கு ஒத்துப்போகும் உணவு வகைகளையே தேர்ந்து, அவ்வுணவும், நல்லசுவையுடையதாக இருப்பதால் உணவுபடைப்பவர், மேலும் உண்ணுமாறு வற்புறுத்தினும், அவர்கள் அன்பு வேண்டுகோளையும் மறுத்து வேண்டும் அளவே உண்பதை வழக்கமாக, விரதமாகக்கொள்வான் உயிர்க்குச் சிறுகேடும் வராது. இதைஉணர்ந்திருந்தமையினாலேயே சொல் சுருக்கத்தில் கருத்துடைய வள்ளுவர், உணவில் கருத்தாக இருக்க வேண்டும் என்பதைவலியுறுத்த அருந்தியது அற்றது போற்றி உணின் மருந்தென வேண்டா' (942), "அற்றால் அளவறிந்து உண்க' (943), ம | ற ல் ல உய்க்க துவரப்பசித்து’’ (944) 'மறுத்து உண்ணின் ஊறுபாடு இல்லை உயிர்க்கு’’ (945) என. ஒன்றிற்கு மேற்பட்ட குறட்பாக்களை செலவழித்துள்ளார்.