பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. வள்ளுவர் வகுத்த பொருளாதாரம் முடியாட்சி, படையாட்சி குடியாட்சி என ஆட்சிமுறை எதுவேயாயினும், தன்நாட்டு மக்கள், பசி அறியாது, பிணி இல்லாது பகைப்பயம் அற்று வாழ வழி வகுப்பதே நல்லாட்சி யாளரின் நீங்காக் கடமையாகும். 'பசியும் பிணியும் பகையும்'நீங்கி வசியும்வளனும் சுரக்கு என வாழ்த்தி என்பது' சிலம்பும் (5; 72-73) மேகலையும்(1: 70-71) பசி இல்லாகுக பிணிகேண் நீங்குக' என்பது ஐங்குறுதுாறு (15) 'உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் - சேராது இயல்வது நாடு' என்பது குறள் (724) உடலே உணவினால்ஆன பிண்டம்தான், அது உணவையே முதலாகக் கொண்டுள்ளது. ஆகவே மக்கள் உயிரோடு வாழவேண்டின், அதற்கு உணவுதான் துணை செய்யும். அவர்க்குப் பசியறியாப் பெருவாழ்க்கை அளிப்பது உயிர்கொடுத்தது போலாம், உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே, உண்டி முதற்றே உணவின் பிண்டம்’ என்பது புறநானூறு (18); 'மண்திணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம், உண்டிகொடுத்தோர் உயிர்கொடுத்தோரே' என்பது மணிமேகலை (11: 95-96), "மக்கள் யாக்கை உணவின் பிண்டம்' என்பதும் மணிமேகலைதான் (9: 90) ஆக, பசி, பிணி, பகை மூன்றனுள், முதற்கண் போக்க வேண்டுவது பசி. - விளைநிலம், வளம்தரும் நல்லதாகவும், குறைவறியா நீர்வளம் வாய்த்ததாகும் அமைந்தவழியே உணவினைப் பெறல் இயலும். நீர்வளம் இன்மையால், அரும்பாடுபட்டுப் 83