பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்செலவுசெய்து விளைத்துவிட்டு, விதைத்தவிதை முளைவிட்டு வெளிப்படவும், விளைந்து பயன்தரவும் இன்றியமையா நீருக்கு மழைஒன்றையே எதிர்நோக்கி இருக்கும் நிலம், கடல்போல் பரந்துகிடப்பினும், சிறிதும் பயன்படாது. உடையானுக்கு உரிய பயன்தராது; நாடாளும் மன்னனுக்கும் உதவாது. 'வித்திவான் நோக்கும் புன்புலம் கண்ணகன் வைப்பிற்று ஆயினும், நண்ணி ஆளும் இறைவன் நாட்கு உதவாது' என்பது புறநானூறு (18). ஆகவே ஒருநாட்டின் செல்வவளம் செழிக்கவேண்டின், அந்நாடு நீர்வளத்தைக் குறைவறப் பெற்றிருத்தல் வேண்டும். இதை உணர்ந்தவர் வள்ளுவர். அதனால்தான். அவர் தாம் பாடத்தொடங்கிய திருக்குறள் பாடி முடிய வேண்டிக் கடவுளை வாழ்த்திவிட்டு, நூலைத் தொடங்கும் நிலயிலேயே, நாட்டிற்கு நீர்வளம் தருவதாய மழை வளத்தைப்பற்றி 'வான்சிறப்பு’’ எனும் தலைப்பிட்டுப்பாடி வைத்துள்ளார். தன்னை உண்டாரை இளவறியாப் பெருவாழ்வில் வாழவைக்க வல்லதாய அமிழ்தம் போன்றது, மழை ( அமிழ்தம் என்று உணரற்பாற்று) உண்பார்க்கு உணவுப் பொருட்களை உண்டாக்குவதோடு. தானும் உணவாகிப் பயன்படுவதுமழை ("துப்பு ஆக்கி-துப்பு ஆய தூஉம் மழை",) பருவந் தோறும் .ெ பாய் யாது பெய்யும் மழை ஏதேனும் ஒரு ஆண்டில் பொய்த்து விடின் உலகம் பெருநீராம் கடலால் சூழப்பட்டிருப்பினும்; அவ்வுலகில், பசிப்பிணி, மக்களிடையே நிலைபெற்று நின்று வருத்தத் .ெ த ர ட ங் கி வி டு ம் (உள்நின்று உடற்றும் பசி') குருவளிக்காற்ருேடு கூடிய மழை. போதுமான அளவு 84