பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெய்யத்தவறிவிடுமாயின். உழவர் தம், ஏர்த் தொழிலைச் செய்யார் ஏரிள் உழார் உழவர் அவ்வாறு பொய்யாது இருந்து நாட்டவரைக் கெடுக்கவல்லது உம் மழைதான் பின்னர் அவர் வேண்டுமளவு பெய்து, அவர்களை வாழவைப்பதும் மழைதான், 'கெடுப்பது உம் எடுப்பது உம் எல்லாம் மழை சிறிது ஈரம் இருந்தால்ே முளைத்துத் தலைகாட்ட வல்லதாய புல்லும் மழைத்துளி விழாதாயின் தலைகாட்டாது, 'பசும்புல் தலை காண்பது அரிது’’ பெருநீரால் நிறைந்த கடலும், அக்கடல் நீரைக்குடித்தே மழைபெய்யும் மேகம்தன் தொழிலைச் செய்யத்தவறி விடுமாயின், முத்தும் பவளமும்போலும் செல்வவளத்தையும். மீனும் நண்டும்போலும் உ ண | வ ள த் ைத யு ம் தரும் அக்கடலும் தன் கடமையில்குன்றி விடும்’ நேடுங் கடலும் தன் நீர்மைகுன்றும் மழைபெய்யாது வறண்டு விடுமேல், கடவுள்களுக்குச் செய்ய வேண்டியவாய நாள் வழிபாடும் ஆண்டுவிழாவும் நடைபெறா. 'சிறப்பொடுபூசனை செல்லாது” வானம்தான்வழங்க வேண்டி, மழையாகிய தானத்தை வழங்காது மறுத்துவிடின் உலகில் தானமும் நடைபெறாது தவமும் நிலைபெறாது. 'தானம் தவம் இரண்டும் தங்கா’ முடிந்த முடிவாகக் கூறவேண்டின் நீர் இல்லாதுபோயின் உலகமே இல்லை 'நீர் இன்றி அமையாது உலகு. ” இவ்வாறு ஒன்றல்ல பத்து குறட்பாக்களில் மழை வளத்தை, அதுதரும் நீர் வளத்தைப் பாராட்டியும் நீர் வளத்தின் இன்றியமையாமையினைக் குறைவறக் கூறி விட்டதாக மனநிறைவு உண்டாகவில்லை வள்ளுவர்க்கு, அதனால் தம் நூலிடையே வாய்க்குமிடமெல்லாம், நீர்வளப் பெருமையை வாயாரப்பாராட்டிச் செல்வதை மேற் கொண்டுள்ளார். 85