பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடமையில் தவறாக் கற்புடைய மனைவி, வேண்டும் போதெல்லாம் ேவ ண் டு ம் ப ய ன் அளிக்கவல்ல தெய்வம் போன்றவள் என வாழ்க்கைத்துணைவியின் பெருமை பாடவந்த வள்ளுவர். அவளை, உழவர் வேண்டும் போதெல்லாம் வேண்டும் அளவு பெய்து துணைசெய்யும் மழைக்கு உ வ ைம ய ா க் கு வ த ன் மூலம் மழையின் பெருமையினைப் பாராட்டியுள்ளார். 'பெய்எனப் பெய்யும் மழை” (55) - அறநெறிப்படி அரசாள்வான் பெருமை கூறவந்த வள்ளுவர், அத்தகையான் நாட்டில்தான் பசி, பிணி, பகையறியா நல்வாழ்வின் தல்லதுணைகளாம். மழையும், அதுதுணை செய்ய உணவாகும். வி ைள .ெ ப ா ரு ளு ம் உணவாகும் எனக்கூறும் இடத்தில் மழையின் பெருமை யினைப் பாராட்டியுள்ளார். 'மன்னவன் நாட்ட பெயலும் விளையுளும் தொக்கு’’ (545) - நாடாளும் வேந்தன் தன்நாட்டு மக்களிடத்தில் செலுத்த வேண்டிய அருள் உடைமையினைச் செலுத்தத் தவறி விடுவனாயின், அந்நாட்டு மக்கள் படநேரிடும் துன்பம் எவ்வளவு கொடிதாம் என்பதை உலகிற்கு உணர்த்த விரும்பிய வள்ளுவர், அதற்கு உவமையாகப் பெய்து உலகத்து உயிர்களை வாழவைக்க வேண்டிய மழை பொய்து விடுமானால், மக்களும் மற்ற உயிர்வகைகளும் எந்துணைக் .ெ க டு மை க் கு உள்ளாக நேரிடும் என்பதைக் கூறிய தன்மூலம் மழையின் மாண்பினை உணர்த்தியுள்ளார் துளி இன்மை ஞாலத்திற்குளற்று? (557) அதேபோல் அரசாள்வான் ஆட்சிமுறை தவறி அல்லது செய்யத் தொடங்கிவிடுவராயின் அவன் நாட்டில், மழை 86