பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன்கடமையைச் செய்ய மறுத்து அவன்நாட்டில் பெய்யாது இருந்து அவனைத்தண்டிக்கும் எனக் கூறியதன் மூலம், நல்லவர்க்குத்துணைபோகும் மழை அல்லாதாரை அல்லலுக்கு ஆளாக்கும் என்பதன் மூலம், அறவழி நடைபெறத்துணை செய்யவல்லதான மழையின் பெருமையைப் பார்அறியச் செய்துள்ளார் 'உளவுகோடி, ஒல்லாது வானம் பெயல்’ (559), - ஒருநட்டிற்கு இலக்கணம் வகுத்திருக்கும் வள்ளுவர், அ ந் நா ட் டி ன் தேவை பலவற்றுள், மழைகுறைவறப் பெய்வதால், உண்ணுதற்கும், உணவினை உளவாக்குதற்கும் உற்றதுணையாய் நிற்கும் நீர்நிலைகளில் தேங்கி நிற்கும் நீரும், ஆ ற் று. ம ன ைல அகழ்ந்தாலும், ஆழ்ந்த கிணறுகளை வெட்டினாலும் பீரிட்டுச்சுரக்கும் ஊற்றுநீரும், பெருமழை பெய்வதால் பனிப்பாறைகள் உருகுவதாலும், பெருமலைகளிலிருந்து உ ரு ண் ேட டி வ ரு ம் நீரும் இன்றியமையாதன எனக்கூறியிருப்பதன் மூலமும் நீரின் இன்றின்மையாமையினைக் கூறியுள்ளார் இருபுனலும் வருபுனலும் நாட்டிற்கு உறுப்பு’’ (737) ம ைழ யி ன் இன்றியமையாமையினைக் காதலர் வாழ்க்கைக்கு இலக்கணம் வகுக்கும் நிலையிலும், வள்ளுவர், மறந்துவிடவில்லை. தம்மை விரும்பும் காதலிக்குக் காதலன் காட்டும் அன்பும் அருளும், உழுதுண்டு வாழும் உழவர் பெருமக்களுக்கு, அவர்கள் வேண்டும்போது வேண்டும் அளவே பெய்யும் மழையை உவமை ஆக்கியதன் மூலமும் உள்ள அமைதிபெற்றுள்ளார். 'வாழ்வார்க்கு வானம் பயத்தற்று' (1192) ஆக, நாட்டின் நல்வாழ்விற்கு நீர்வளம் இன்றியமை யாதது என்பதும், அவ்வளம் یتا- மழையினாலேயே ஆகும் என்பதும் உறுதியாயின, அம்மழை சிலபல ஆண்டுகளில் 87