பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரோவழி தொடர்ந்து வறண்டுபோதலும் உண்டு அவ்வாறு மழைமாறிப்போகும் காலத்திலும் நாட்டின் நீர்வளம் குறைதல் கூடாது. அதுஅறியும் நல்லாடி, மழைபெய்யும் காலத்தே அம்மழைநீரைத் தேக்கிவைத்தற்காம் பெரியபெரிய நீர்த்தேக்கங்களையும் ஏரிகளையும், குளங்களையும் வெட்டி வைத்திருப்பதும். அவையும் வறண்டுபோகும் காலத்தில், பயன் அளிக்கா, ஆழ்கிணறுகளை ஆங்காங்கே தோண்டி வைத்திருப்பதும், நாடாள்வாரின் தலையாய கடமை ஆகும். அஃது அறிந்து செயல்படும் அரசே, அறிவு அறியா நிலைபேறுடைதாகும். "நிலன்நெறி மருங்கின் நீர்நிலை பெருகத்தட்டோர் அம்ம இவண் தட்டோரே; தாள்ளாதோர் இவண் தள்ளாதோரே'. என்பது பாண்டியன் நெடுஞ் செழியனுக்குப் புலவர் குடபுலவியனார் கூறிய அறிவுரை. இது அறிந்து செயல்பட்ட கரிகாற்பெருவளத்தானைப் பாராட்டியுள்ளார். புலவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார். "குளம்தொட்டு வளம் பெருக்கி’ (பட்டினப்பாலை: 284) ஒருநாட்டில், நீர்வளம் வாய்த்துவிட்டால் மட்டும் போதாது, நீர் துணைசெய்ய விளையும். நிலமும் நல்லதாதல் வேண்டும் நிலம் நல்லது அல்லவாயின் அந் நிலத்தைச் சேர்ந்த நல்லநீரும் நல்லது அல்லதாகிவிடும், இதையும் உணர்ந்திருந்தார் வ ள் ளு வ ர். நல்லாரோடு சேரும் ஒருவன் நல்லன் ஆதற்கும், நல்லவரல்லாதோடு சேரும் நல்லவனும்,நல்லவன் அல்லாதனாகிவிடும். உலகியல் உண்மையை விளக்க, நிலத்தின் இயல்புக்கு ஏற்ப, நல்ல தாகவும், நல்லது அல்லதாகவும் மாறிவிடும். நீரின் இயல்பை உவமை ஆக்கி இருப்பது காண்க, . "நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு இனத்தியல்ப தாகும் அறிவு” (452) 88