பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

அனல், குளிர்ச்சி, வாதம் , அசனி, பதுண், ஆயுதம், விடம் , மருந்து, பசி, தாகம் , பிணி, முனிவறாமை (கோபம் குறையாமை) என்னும் பனிரெண்டு விதங்களால், உடம் புக்கு வேதனை உண்டாகிறது.

வேதனை மட்டும் வந்தால், மெய் சமாளித்துக் கொள்ளும். இந்த உடம் புக்கு பதினெட்டு வகை குற்றம் உண்டு என்றும் ஒரு கணக் கைக் குறித்துக் காட்டுகிறது பிங்கல நிகண்டு. (பக்கம் 83)

பசி, தாகம், பயம், வெகுளி, உவகை, குறைக்காக இரத்தல், நினைப்பு, உறக்கம், நரை, நோப் படுதல், மரணம், பிறப்பு, மதம், இன்பம் அதிசயம், வியர்த்தல், துன்பம், செயலற்றுப் போதல் என்ற 18 விதங்களில், மெய் அனுதினமும், அகலாத நொடிப் பொழுதும் அவதிப் பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

இப்படி மெய், நொய்யாக நொறுங்கிப் போகும் பொழுது, இதன் பிடியிலிருந்து விடுபட்டு வருவது எப்படி? எப்போது? அதனால் தான், மெய்யை, பிணிக்கும் பொல் லாப் பொறி என்றனர்.

3. கண்: அறிவின் வாயில் என்றும் அனுபவத்தின் சாரளம் என்றும், உலகை ரசிக்கச் செய்யும் உன்னத மகத்துவம் என்றும் கண்களைப் போற்றுவார்கள்.

வண்ணங்களைப் பார்க்க உதவும் செல்களுக்கு கோன் (Cone) என்றும்; கறுப்பு வெள்ளையைப் பார்க்க உதவும் செல்களுக்கு ராட் (Rod) என்றும் பெயர். நமது இரு கண்ணுக்குள்ளே 7 மில்லியன் கோன் செல்களும், 125 மில்லியன் ராட் செல்களும்